பிரேத தோசம் :

பிரேத தோசம்

---------------------

ஆண்,பெண் இருபாலார் ஜாதகத்திலும் சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் ராகு நின்றால் அந்த ஜாதகத்திற்கு பிரேத தோசம் உண்டு. சந்திரன் சோத்துப்பிண்டத்தையும், ராகு வாயையும் குறிக்கும். இவர்கள் இறந்து போன உறவினர் ஒருவருக்கோ,பலருக்கோ பிண்டம் வைக்காததால், அந்த ஆத்மாக்கள் பிரேதமாக மாறி ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் மன ரீதியான ,உடல் ரீதியான பிரச்சினைகளை செய்வார்கள்.அல்லது இவர்கள் குடும்பத்தில் யாராவது ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டிருப்பாள். அவளுக்கு தர்ப்பணம் எதுவும் யாரும் செய்திருக்கமாட்டார்கள். அவள் பிரேதமாக மாறி ஜாதகருக்கு தொல்லை கொடுப்பாள். இத்தகைய ஜாதகர்களின் வீட்டில் இதனால் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள்.

இதற்கு பரிகாரமாக ஒரு அமாவாசை நாளில் ஒரு ஏழைப்பெண்ணுக்கு அன்னதானம்,வஸ்திர தானம் செய்ய தோசம் விலகும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-