ஜோதிடத்தில் பஞ்ச பூத தத்துவம்.
ஜோதிடத்தில் பஞ்ச பூத தத்துவம். வேதத்தில் பஞ்ச பூதங்களை பற்றிய விஷயங்கள் நிறைய உள்ளது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் என்பவை பஞ்ச பூதம் என்பது நாம் அறிந்ததே. இதில் இந்த வரிசை முக்கிய இடம் பெறுகிறது. இவ்வுலகில் கண் காது முதலியவைகளுக்குள் அகப்படும் விஷயங்கள் கொஞ்சந்தான். அகப்படாதவை அதிகமாக இருக்கின்றன. அவைகள் அநுமானப் பிரமாணத்தில் அகப்படும் என வேதம் சொல்கிறது. வேதத்தில் இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களையும் பதார்த்தங்கள் என கூறுகின்றனர். பதார்த்தங்களை ஏழு விதமாகப் பிரித்திருக்கிறார்கள். ஏழு பதார்த்தங்களானது திரவியம், குணம், கர்மம், ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம், அபாவம் ( இல்லாதது) என்பவை ஆகும். ...