தானம்

சித்திரை மாதத்தில் படுக்கை,ஆஸனம்,பாய்,இவைகளை தானம் கொடுப்பது மகாவிஷ்ணுவுக்கு சந்தோஷம் அமைந்து அதனால் புத்ர சந்தானம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும்.
வைகாசி மாதத்தில் கங்கை,யமுனை,கோதாவரி,சிந்து,தாமிரவருணி,வைகை,காவேரி போன்ற நதி தீரத்தில் வைத்து 9 நாட்கள் விரதம் இருந்து,பிரம்மச்சாரிக்கு,ஹவிஸாஸ் ( கஞ்சி வடிக்காத அன்னம் ) தானம் கொடுத்து மதுஸுதனை பூஜிக்க வேண்டும்.
இதன்மூலம் ஆயிரம் பிறவிகளில் செய்த பாபம் விலகும்.
ஆனி மாதத்தில் தண்ணீர் பாத்திரங்களையும்,பசு மாட்டையும்,விசிறி,தயிர்,அன்னம் இவற்றையும் தர்மம் செய்தால் ஆயுள் வரை கஷ்டமே இருக்காது.
திரிவிக்ரமன் இதனால் சந்தோஷமடைகிறான்.
ஆடி மாதத்தில் குடை ,செருப்பு,லவணம் ( உப்பு ),நெல்லிப்பழம் இவற்றை தானம் செய்தால் உடலில் உள்ள பீடை அகலும்.வாமன மூர்த்தி இந்த தர்மத்தால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.
ஆவணி மாதத்தில் பால் நிறைந்த பாத்திரம்,நெய் உள்ள பாத்திரம்,நெய்யில் செய்த பஷணங்கள்,பழ வர்க்கங்கள்,இவற்றை தர்மம் செய்தால் இந்த ஜென்மத்தில் செய்த பாபம் அகலும்.ஸ்ரீதரன் இந்த தர்மத்தால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.
புரட்டாசி மாதத்தில் பால் பாயாசம்,தேன்,கண்ணாடி,பொங்கல்,இவைகளை தர்மம் செய்தால் மகாலஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
ஹிருஷீகேசன் இந்த தர்மத்தால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.
ஐப்பசி மாதத்தில் தோஷமில்லாத காளை மாடு,( காய் அடித்து இருக்கக் கூடாது ) தயிர் அன்னம்,புளிப்பு ருசி தரும் வகைகள் முதலியவற்றை தர்மம் செய்தால் புத்திர தோஷம் விலகும்.பத்மநாபன் இதனால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.
கார்த்திகை மாதத்தில் பஞ்ச லோகங்களில் முடிந்தது ( தங்கம்,வெள்ளி,தாமிரம்,ஈயம்,இரும்பு ) தீபம்,நவரத்தினங்களில் முடிந்தது ( வைரம்,வைடூரியம்,கோமேதகம்,புஷ்ப ராகம்,நீலம்,முத்து,பவளம்,மரகதம்,மாணிக்கம் ) இவற்றில் ஒன்றையாவது தர்மம் செய்தால் விரும்பிய பொருளை அடைவான். தாமோதரன் இந்த தர்மத்தால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.மார்கழி மாதத்தில் நாற்கால் மிருகங்களை ( பசு,காளை,ஓட்டகம்,குதிரை,ஆடு ) தானம் செய்தால் சகலவிதமான யோக பாக்கியங்களும் கிடைக்கும்.
மார்கழி மாதத்தில் நாற்கால் மிருகங்களை ( பசு,காளை,ஓட்டகம்,குதிரை,ஆடு ) தானம் செய்தால் சகலவிதமான யோக பாக்கியங்களும் கிடைக்கும்.
இதனால் மகாவிஷ்ணு சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.
தை மாதத்தில் தங்கத்தை தானம் செய்தால் சரீரத்தில் உள்ள தோஷம் விலகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
புகழும்,பெருமையும் தேடிவரும்.
இதனால் தர்மராஜன் சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.தை மாதத்தில் தங்கத்தை தானம் செய்தால் சரீரத்தில் உள்ள தோஷம் விலகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
புகழும்,பெருமையும் தேடிவரும்.
இதனால் தர்மராஜன் சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.பங்குனி மாதத்தில் நெல்,பசு,மான் தோல் இவற்றை தர்மம் செய்தால் விரும்பிய பொருளை அடைவான்.
இதனால் ஸ்ரீ கோவிந்தன் சந்தோஷம் அடைகிறான்.
மார்கழி மாதத்தில் நாற்கால் மிருகங்களை ( பசு,காளை,ஓட்டகம்,குதிரை,ஆடு ) தானம் செய்தால் சகலவிதமான யோக பாக்கியங்களும் கிடைக்கும்.
இதனால் மகாவிஷ்ணு சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.
தை மாதத்தில் தங்கத்தை தானம் செய்தால் சரீரத்தில் உள்ள தோஷம் விலகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.புகழும்,பெருமையும் தேடிவரும்.
இதனால் தர்மராஜன் சந்தோஷமடைந்து பலன் தருகிறான்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-