ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள் !

ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள் !




அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
அதன் மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுபோன்ற பித்ரு வழிபாட்டு தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன் ஸ்ரீசங்கமேஸ்வரை
யும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.
*21 பிண்டங்கள்:*
********************
பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச் சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள்.
பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.
*லவ-குச குளத்தில் நீராடுங்கள்:*
*********************************
கோயம்பேடு தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். அவரின் திருவருளால் லவ-குசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம்.
ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச் சஞ்சலம் நீங்கும்; பித்ருக்களின் அசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
*முன்னோர் வழிபாடு:*
**************************
ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.
பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.
*பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்:*
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் ஒரு சொல். அமா என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (குவிந்தது-அடுத்தது) என்று பொருள். ஓர் ராசியில் சூரியன் சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும். வான மண்டலத்தில் தமது அளப்பு வேலையைச் சிருட்டியின் ஆரம்ப காலத்திலிருந்தே தொடங்கிய இருவரும் அமாவாசை நாளன்று தான் ஒருங்கு கூடுகின்றனர்.
சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசைத் திதி உண்டாகும். இத்தகைய சூரிய சந்திரர் இருவரும் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள். உயிர்களின் சுகபோகமாகிய மாறுதலையுணர்த்தும் நாள். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர்.
அன்று நோன்பு நோற்றல், விரதங்காத்தல், சிறந்ததும் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும். ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். சூக்கும சரீரம் அழிவதில்லை.
அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர் தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.
அங்ஙனம் சென்ற உயிர், பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க, நரகத்தில் அனுபவிக்கும்.
 சுவர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதிர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை அடையும். அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.
பாட்டனுடைய உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும் மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர். இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர். இவர்களைப் பிரீதி செய்து வழிபடுவதுதான் சிராத்தம் எனப்படும்.
இறந்து போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சுவர்க்க நரகங்களையடையவனவும் முத்தியடைவனவுமன்றிச் சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும். அன்றி, அவை இறக்கின்ற கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.
சூரியனும் சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரே நேர்படும் சமயமே இதற்கு மிகவும் சிறந்தது. ஒவ்வொரு அமாவாசையும் பிதிர்கருமத்திற்கு விசேஷமானது. எனினும் ஆடி அமாவாசை மிகவும் புனிதமும் விசேஷமானதாகும்.
 ஏனெனில், சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிதிர்களுக்குரிய இடமாகும்.
இது பிதுர் லோகம் எனப்படும். வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாசமாகும். ஆகவே ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணத்திற்கு மிகவும் சிறந்த காலமாகும்.
 அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் தீர்த்தமாடுதல் மிகவும் நல்லது. கடல்நீரை, நமது பாவத்தை கழுவும் பரிசுத்த நீராகவும், இறைவனது அருள் நீராகவும் நினைத்து காலம் சென்ற பிதிரர்களை எண்ணி, அவர்களது பாவத்தைப் போக்கி அவர்களுக்கு முத்தியளிக்கும் வண்ணம் இறை வனை வேண்டி நீராடல் வேண்டும்.
*தர்ப்பணம் ஏன்?*
*திவசத்தின்போது பிண்டம் கொடுப்பது ஏன்?*
திவசத்தின்போது இறந்த பெற்றோர், பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் ஆகிய மூவரின் பெயர்களைச் சொல்லி அழைத்து அவர்களுக்கு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது. ஏன் தெரியுமா? குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள சுக்கிலம் எனப்படும் தாதுவாகும். இந்தத் தாதுவில் 84 அம்சங்கள் உள்ளன.
அதில் இருபத்து எட்டு(28)அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உணவு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டானவை.
 பெற்றோரிடமிருந்து இருபத்தியொரு(21) அம்சமும், பாட்டனாரிடமிருந்து பதினைந்து(15) அம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து பத்து(10) அம்சமும், நான்காம் மூதாதையிடமிருந்து ஆறு(6) அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்
து மூன்று(3) அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு(1) அம்சமும் என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு (56)அம்சங்கள் ஏழாம் தலைமுறை மனிதனின் சுக்கிலத்தோடு(28) அம்சங்கள் தொடர்பு கொண்டவை.
இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. அதனால்தான், திவசத்தின்போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது.
கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான பலன் உண்டு.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-