சித்திரை மாதத்தில் படுக்கை,ஆஸனம்,பாய்,இவைகளை தானம் கொடுப்பது மகாவிஷ்ணுவுக்கு சந்தோஷம் அமைந்து அதனால் புத்ர சந்தானம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும். வைகாசி மாதத்தில் கங்கை,யமுனை,கோதாவரி,சிந்து,தாமிரவருணி,வைகை,காவேரி போன்ற நதி தீரத்தில் வைத்து 9 நாட்கள் விரதம் இருந்து,பிரம்மச்சாரிக்கு,ஹவிஸாஸ் ( கஞ்சி வடிக்காத அன்னம் ) தானம் கொடுத்து மதுஸுதனை பூஜிக்க வேண்டும். இதன்மூலம் ஆயிரம் பிறவிகளில் செய்த பாபம் விலகும். ஆனி மாதத்தில் தண்ணீர் பாத்திரங்களையும்,பசு மாட்டையும்,விசிறி,தயிர்,அன்னம் இவற்றையும் தர்மம் செய்தால் ஆயுள் வரை கஷ்டமே இருக்காது. திரிவிக்ரமன் இதனால் சந்தோஷமடைகிறான். ஆடி மாதத்தில் குடை ,செருப்பு,லவணம் ( உப்பு ),நெல்லிப்பழம் இவற்றை தானம் செய்தால் உடலில் உள்ள பீடை அகலும்.வாமன மூர்த்தி இந்த தர்மத்தால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான். ஆவணி மாதத்தில் பால் நிறைந்த பாத்திரம்,நெய் உள்ள பாத்திரம்,நெய்யில் செய்த பஷணங்கள்,பழ வர்க்கங்கள்,இவற்றை தர்மம் செய்தால் இந்த ஜென்மத்தில் செய்த பாபம் அகலும்.ஸ்ரீதரன் இந்த தர்மத்தால் சந்தோஷமடைந்து பலன் தருகிறான். புரட்டாசி மாதத்தில் பால் பாயாசம்,தேன்...