உங்கள் ஜாதகத்தை நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம் .,

உங்கள் ஜாதகத்தை நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம் .,
-
எளிய நடைமுறையில் ஜாதகத்தை பார்த்தவுடன் பலன் சொல்வது எப்படி ?
-
பாவ பரிசீலனை செய்வது எப்படி ?
ஜோதிடத்தில் ஜோதிடர்கள் ஜோதிடத்தை எப்படி ஆராய்கிறார்கள்.,

ஜோதிட தொழில் முறை இரகசியம்.,இதில் கூறப்பட்ட
அனைத்தும் பொது விதிகளே ஆகும்.,

1 .எந்த பாவத்துக்கு பலன் கூறுகிறோமோ,அந்த பாவ
ராசியை லக்கினமாக வைத்துக் கொள்ள வேண்டும் .,

2. எந்த பாவத்தை பார்க்கிறோமோ அந்த
ல்க்கினதிற்குடைய சுபகிரகங்கள் ,பாவகிரகங்கள்
வைத்து பார்க்கவும்

3. பாவம் என்பது தேகமும் ,பாவாதிபதி அதற்கு ஜீவனும்
ஆகும்.,

4 .பாவத்திற்கு கெட்ட கிரகங்களின் சேர்க்கை அல்லது
பார்வை இருந்தால் ஸ்தூலத்திலேயே
கெடுதியும்,பாவதிபதிக்கு அப்படியே இருந்தால்
சுஷ்மத்திலேயே கெடுதியையும் கூறவும்.,( நல்ல கிரகங்கள் இருந்தால் நன்மையை கூறவும் )

5. எந்த பாவத்திற்கு கேந்திர ,திரிகோனங்க்களில்
சுபகிரகங்கள் இருக்கின்றனவோ அந்த பாவத்திற்கு
நல்ல பலனை கூறவும் .,

6. கெட்ட கிரகங்கள் இருந்தால் கெட்ட பலன் கூறவும் ,

7. பாவாதிபதி ,காரகன் இவர்கள் நீசமாக இருந்தாலும்
நவாம்சத்திலே பலத்துடன் இருந்தால் நல்ல பலன்
உண்டு .,

8. அந்தந்த பாவத்திற்கு அஷ்டமாதிபதிகள் சம்பந்தம் அல்லது பார்வை பாவத்தை நாசம் செய்யும் .,
9.எந்த பாவத்திற்கு 3 ம்மிடம் சுபக்கிரகங்க்களோடு சேர்ந்திருக்கிறதோ - அல்லது பார்வையை பெற்றிருக்கிறதோ - அல்லது பலம் பெற்றிருக்கிறதோ ,அந்த பாவம் புஷ்டி உடையதென்று சொல்லவும் .,

10. எந்த பாவத்திற்கு இருபுறங்களிலும் (2,12 முன்னும்- பின்னும்) சுபக்கிரகங்கள் இருக்கின்றனவோ,அந்த பாவத்தின் பலன் நல்லதாகவே இருக்கும் .,எந்த பாவத்திற்கு இரு புறங்களிலும் கெட்ட கிரகங்கள் இருக்கின்றனவோ அந்த பாவத்தின் பலன்கள் கெடுதலாகவே இருக்கும் ,இதே மாதிரி பாவாதிபதிக்கும் பார்த்து கொள்ளவும் .,
இயற்க்கை சுபர்கள்

குரு ,புதன் (பாவியுடன் சேராத),சுக்கிரன்,சந்திரன் -சுபக்கிரகங்கள்
சனி ,சூரியன் ,செவ்வாய்,ராகு ,கேது - பாபர்கள்
இங்கு கூறப்பட்ட கெட்ட கிரகங்கள் என்பது
இயற்க்கை பாவி யாக வருபவர் ,லக்கின பாவியாக வருபவர் ,ராசி- லக்கின 6,8,12 க்குடையவர்கள் .,
இங்கு கூறப்பட்ட சுபகிரகங்கள் கிரகங்கள் என்பது
இயற்க்கை சுபராக வருபவர் ,லக்கின சுபராக வருபவர் ,
லக்கின - ராசி 1,5,9-1,4,7,10 க்குடையவர்கள் .,
இது போக வேறு விதிகளையும் மனதில் நிறுத்தி - பார்த்து பலன் கூறினால் தீர்கமான பலன் கிடைக்க
வாய்ப்புண்டு.,

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-