மிக விசேஷமான நாள்

மிக விசேஷமான நாள்
---------------------------------------

சனி + கேது நம் பாவங்களை / தோஷங்களை நீக்கும் வல்லமை உடைய அமைப்பு இறைவன் நம் பாவங்களை நீக்க  நமக்கு கொடுக்கும் அற்புத வாய்ப்பு. கால புருசனுக்கு "மூலம்" நட்சத்திரம் எல்லா பாவங்களை நீக்கும் வல்லமை உடைய  அமைப்பு.  

எப்படி....? ஜோதிடத்தில் ஆண் நட்சத்திரம், பெண் நட்சத்திரம், அலி நட்சத்திரம் என்று 3 பிரிவாக உள்ளது இதில் அலி நட்சத்திரத்தில் பரிகாரம் செய்து பாருங்கள் நல்ல பலன் உடனே கிடைக்கும்.

அலி என்றால் நாம் கேலி, கிண்டல்  செய்வோம்.... ஆனால் விதி வேற மாதிரி விளையாடும்.... நம் பாவங்களை நீக்கும் வல்லமை அந்த அலிக்கு மட்டும் இறைவன் வழங்கியுள்ளார்.

இந்து தர்மத்தில் மட்டுமே ஆண் தெய்வம், பெண் தெய்வம், அலி தெய்வம் என்று பிரித்து உள்ளார்கள்   இதன் ரகசியம் அனுபத்தில் மட்டுமே உணரமுடியும் 

குரங்கு(அனுமன்)  என்பது அலி இனம் அதாவது "மனிதன் பாதி விலங்கு பாதி"... விநாயகர், ஆஞ்சிநேயர், நரசிம்மர், ஹயகிரீவர், etc.....  எல்லா பரிகாரமும் அலி இன நட்சத்திரத்தில் செய்தால் தோஷம் உடனே விலகும். மேஷ மண்டலம், சிம்ம மண்டலம், தனுசு மண்டலம்... இவற்றில் ஆண், பெண், அலி என்று அவரவர் லக்ன அடிப்படையில் அமையும்....

குறிப்பு: பொதுவான ஆண் நட்சத்திரம், பெண் நட்சத்திரம், அலி நட்சத்திரம் என்பது வேற... அவரவர் பிறந்த லக்ன அமைப்புப்படி இது மாறும்.

உ .ம். ஒரு ஆண் பிறந்த நேரம்  விருச்சிக லக்னம்  அனுஷம்(பிறந்த நட்சத்திர லக்ன புள்ளி) என்றால் அவர் ஆண் என்பதால் அனுஷம்   ஆண் நட்சத்திரம்... உத்திரட்டாதி பெண் நட்சத்திரம்.... பூசம் அலி நட்சத்திரம் என்று அமையும்.  இதுவே  பெண் பிறந்து இருந்தால் அனுஷம் பெண்  நட்சத்திரம், உத்திரட்டாதி ஆண், பூசம் அலி நட்சத்திரமாக அமையும்.

கால புருசனுக்கு "மூலம்" நட்சத்திரம் சிறந்த பரிகார நட்சத்திரம். கால புருஷன் ஆண் என்பதால் அசுபதி ஆண், மகம் பெண், மூலம் அலி.

இனி அலி(திருநங்கை) அவர்களை கேலி கிண்டல் செய்யாமல் நம் பாவங்களை போக்கும் கண்கண்ட  தெய்வமாக வழிபடுங்கள்... உங்கள் வாழ்க்கையில்  வசந்தம் வீசும் அனுபத்தில் உணர்வீர்கள்.   

இறைவன் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்யவில்லை....

“அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே,
ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்”
- சிவஞானபோதம் – 1ம் சூத்திரம்

.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-