ஜாதகத்தில் உள்ளடங்கியிருக்கும் 12 பாவங்களில் மிக மிக முக்கியமான பாவம் லக்ன பாவமாகும் .,

--ஜாதகத்தில் உள்ளடங்கியிருக்கும் 12 பாவங்களில் மிக மிக முக்கியமான பாவம் லக்ன பாவமாகும் .,

லக்கினத்துக்கு உடையவர் லக்கினத்தை பார்வை செய்தாலும் - லக்கினத்தில் அமர்ந்தாலும் .,
குருவின் பார்வை லக்கினத்தில் வந்தாலும் - குரு லக்கினத்தில் அமர்ந்தாலும் .,

புதன் லக்கினத்தில் பார்வை செய்தாலும்-அமர்ந்தாலும் .,
சுக்கிரன் லக்கினத்தில் அமர்ந்தாலும் பார்வை செய்தாலும் .,

லக்கினத்துக்கு பலம் ஏற்படுகிறது .,-
லக்கினத்தின் கேந்திர பாவங்களான 1,4,7,10 ஆகிய
பாவங்களில் அல்லது 1,5,9 ஆகிய திரிகோண
பாவங்களில் சுபக்கிரகங்கள் நிற்பதும் .,

லக்கினத்தின் ஹோரை திரிகோணம் ,நவாம்சம்
முதலிய சட்வர்க்கங்களின் அதிபதிகள் சுபகிரகங்களாக
வந்தாலும் லக்கினத்துக்கு பலமுள்ளதாக அறிய வேண்டும் .,

லக்கினம் -லக்கினாதிபதி
லக்னம் பிறந்த நேரத்தில் உதயமாகிற ராசி சுபக்கிரகத்தின் வீடாக அமைந்தால் மிகநல்ல பலன்கள் அளிக்கும் .,

லக்கினத்துக்கு உடையவன் லக்கினத்தில் பார்வை செய்வதும ,லக்கினத்தில் இணைவதும் நல்லபலன் .,
கேந்திர பாவங்களில் நின்றாலும் .,திரிகோணத்தில் நின்றாலும் ,ஏதாவது ஒரு பாவத்தில் -
லக்கினத்துக்கு உடையவன் அமர்ந்தாலும் - பார்த்தாலும் அந்த பாவத்துக்கு பூரண சுப பலன் அளிக்கும் .,
லக்கினத்துக்கு உடையவர் எந்த பாவத்துக்கு உடையவனுடன் சேர்ந்தாலும் ,அந்த பாவம் பூரண சுபபலன் அளிக்கும் .,

உதாரணம்  :-

• இலக்கினத்துக்கு உடையவன் 10 க்கு உடையவனுடன் இணைந்தால் செய்யும் தொழிலில் பூரண நல்ல பலன் அளிக்கும் .,

• லக்கினாதிபதி 7ம பாவாதிபனுடன் இணைந்தால் 7ம்  பாவத்தின் காரக பலன்களை பூரண குனமுள்ளதாக செய்யும் .,
• லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் நல்லது.( உதா) - சிம்மலக்கின ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில் இருப்பது.

• லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது.
• அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது. நல்லதல்ல!
இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும் விதிவிலக்கு ஏனென்றால் அந்த இரண்டு லக்கினங்களுக்கும் சனி அதிபதி.
இதை போல் மற்ற பாவங்களின் பலன்களையும் அறிய முடியும் .,

லக்கினத்துக்கு உடையவன் லக்கினத்திலிருந்து 6,8,12 பாவங்களின் அதிபதிகளுடன் இணைந்தால் தோஷ பலன் அளிக்கும் .
6,8,12 பாவாதிபதிகள் பூரண பலமுள்ளவர்களால் தோஷம் அதிகமாகும் .

6,8,12 க்குடையவர்  பலஹினவரானால் தோஷம் குறைவாக இருக்கும் என்று அறியவும்.
லக்கினத்துக்குடையவன்  சூரியன் ,தேய்பிறை சந்திரன் ,பாவனுடன் இணைந்த புதன் ,செவ்வாய் ,சனி ஆகிய பாபக்கிரகமானாலும் அவன் அமர்ந்த பாவத்துக்கு கேடு விளைவிக்காது .அந்த பாவத்துக்கு சுபபலன் அதிகம் செய்யும் .,

லக்கினாதிபதி அனிஷ்ட பாவத்தின் ( 6,8,12) அதிபதி கூட  ஆனாலும் தோஷ பாவத்தினுடைய தோஷ பலனை மாற்றி நல்ல பலன் அளிப்பான் .,
அதாவது மேஷ லக்கினக்காரர்களுக்கு இலக்கின பாவத்துக்கும் 8 ம்  பாவத்துக்கும் உடையவர் செவ்வாய் ,லக்கினாதிபதி ஆக இருப்பதால் ,அட்டமாதிபத்திய தோஷம் செவ்வாய் செய்யாது .,
ல்கினத்துக்குடைய கிரகம் எந்த பாவத்தில் அமர்ந்தாலும் ,அந்த பாவத்துக்கு பூரண சுப பலன் அளிப்பான் .,

அதாவது மேஷ இலக்கின காரர்களுக்கு லக்கினத்துக்குடைய செவ்வாய் 7 ம் இடத்தில் இருந்தால் பெண்ணுக்கும் கணவனுக்கும் ,ஆணுக்கு மனைவிக்கும் கேடு செய்யாது .,
ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப் பார்த்தால் மிகவும் சிறப்பு.
லக்கினத்துக்கு உடையவன் ,எந்த பாவத்தில் அமர்ந்தாலும் அந்த பாவத்தின் பலன்கள் பூரண குணமாகும் .,

பாவத்துக்கு உடையவனும் ,அந்த பாவத்தின் காரக கிரகமும் பலமுடையவராய் அந்தந்த பாவத்தின் கேந்திரத்திலும் திரிகோணம் முதலிய இஷ்ட பாவங்களில் அமர்ந்தால் அந்த பாவத்துக்கு சொல்ல வேண்டிய அனைத்தும் நலனுக்காக அமையும் .,
லக்கினதுக்கு  உடையவன் அமர்ந்திருக்கும் இராசி நாதனும் ,அந்த பாவத்தினுடைய கிரகமும் இருவரும் ( லக்கினாதிபதியுடைய ஆசரய ராசிநாதன் அந்த பாவகாரகனும் )6 ,8,12 ஆகிய கஷ்ட பாவங்களில் அமர்ந்தால் நலன் கிடைக்காது .,அதே சமயம் ஆபத்தும் செய்யாது .,
லக்கினம் லக்கினத்துக்கு உடையவன் லக்கின காரகன் இவர்களை வைத்து லக்கின பலன் அறிவது போல மற்ற பாவங்களையும் லக்கினம் என்று எண்ணி பாவக பாவ பலன் அறியலாம்.,

லக்கின பாவம் உடல் ,நிறம் ,உருவ வடிவம் ,உற்சாகம் ,திறமை ,உடல் வலிமை ,புகழ் ,பழக்க வழக்கம் ,முதலிய அனைத்தும் இலக்கின பாவத்தால் அறிய வேண்டும் .,
சுபகிரகத்தின் வீடு லக்கினமாக அமைந்தால் பூரண ஆயுளும் ,மதிப்பும்  உண்டாகும் .,

இலக்கினத்துக்கு உடையவன் லக்கினத்தை பார்வை செய்தால் பண வசதி பெருகும் ,புத்தி ,உடல் வலிமை ,ஞாபகசக்தி ,புகழ் இவைஉண்டாகும் .,

லக்கினாதிபதி கேந்திர திரிகோண பாவங்களில் எங்கேயாவது அமர்ந்து லக்கினத்திலிருந்து  7 - மிடத்தில் சுபகிரகம் அமர்ந்தால் புகழ் மேலும் மேலும் பெருகும் .,

லக்கினாதிபதி பாவக்கிரகங்களின் வீடுகளில் எங்கேயாவது அமர்ந்து அது லக்கினத்திலிருந்து 6,8,12பாவங்களில் ஒன்றாக வந்து ,அங்கே பாவக்கிரகம் சேர்க்கை -  அல்லது பார்வை வந்தால் - மரியாதை இழப்பு ஏற்ப்படும் .,

லக்கினத்துக்கு உடையவன் பாப கிரகத்துடன் இணைந்தாலும் ,கஷ்ட பாவங்களில் (6,812) உடையவர் -லக்கினபாவத்தில் அமர்ந்தாலும் நிரந்தரமான உடல் பீடை உண்டாகும்.,

லக்கினத்துக்கு உடையவன் -லக்கினத்தில் அமர்ந்தாலும் ,சுப கிரக சேர்க்கை -கேந்திர பாவத்தில் நிற்பது - உச்சம் - பெற்றாலும் - அரசு மரியாதை ,உயர் பதவி , குணமும் புகழும் உண்டாகும் .,

லக்கினம் பாவ கிரகத்தின் வீடாக வந்து  ல்க்கினத்துக்குடையவன்  லக்கினத்தில் சூரியன் - சந்திரன் இவர்களுடைய மத்தியில் அமைந்தால் ,புத்தி குணம் இருந்தும் இதை செயல்படுத்தும் முறை அறியாமல் பிறரின் உதவியை நாட வேண்டி வரும் .,

லக்கினத்துக்கு உடையவன் லக்கினத்தில் அமர்ந்தால் பிறர் உதவியின்றி புகழ் அடைவான் .,
ல்க்கினத்துக்குடையவன்  பலமுடையவனாக கேந்திர பாவம் ,திரிகோண பாவம் உச்சராசி ,நட்பு ராசிமுதலிய பாவங்களில் எங்காவது அமர்ந்து 8 குடையவன் கேந்திர பாவங்களில் இல்லாமல் இருந்தால் இந்த யோகம் குலத்தின் பெருமை,பூர்ண ஆயுள்,பணம்,புகழ்,முதலிய நல்ல பலனை அளிப்பான்.,

ல்க்கினத்துக்குடையவன் 6,8,12 பாவங்களில்
அமர்ந்தால்துன்பம்,பற்றாக்குறை,மற்றும் தரக்குறைவான வேலைகள்,செய்து தோஷமுள்ள இடங்களில் வாழ்க்கை நடத்துவான்.,
ல்க்கினத்துக்குடையவன் பாவ ராசியில் அமர்ந்து லக்கினத்தில்  பாபகிரக (இராகு) அமர்ந்தால் பிறரை இகழ்ந்து பேசும் பழக்கமும் ,பகைவர்கள்,திருடர்கள்,இவர்களால் பீடையும் உண்டாகும்.,

லக்கினத்திலிருந்து 7, 10 ல் இடத்தில் சுபர்கள் அமர்ந்தால் பதவி உயர்வு வரக்கூடும்.,

லக்கினாதிபதி  பரிவர்த்தனை  பெரும்  போது கஷ்ட  பாவங்கள்  சம்பந்தம்  பெறாமல்  நின்றால்  இராஜயோகம்  .,

லக்கினம் 2,5 இம் மூன்று பாவங்களில் ,சுபக்கிரகங்கள் அமர்ந்தால் ஆதரவுடன் பணம் வர அம்சமுண்டு,சரராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரமாகிய ராசிகளில் ஒன்று ல்க்கினமாகவும்,ல்க்கினத்து உடையவன் ஏதாவது சுபராசியில் அமர்ந்து லக்கின நவாம்சம் சரராசியிலும் வந்தால் எப்பொழுதும் பிரயாணம் செய்யும் யோகம் ஏற்ப்படும்.,

லக்கினம் ,லக்கினாதிபதி ,இலக்கின  நவாம்சம் ரிஷபம் ,சிம்மம் , விருச்சிகம் ,கும்பம் ஸ்திர ராசியில் வந்தால் நிலையாக  ஓரிடத்தில் வாழ்பவனாவான்.,
லக்கினம் ,லக்கினாதிபதி லக்கின நவாம்ச நாதன்,சர ,ஸ்திர,உபய ராசிகளில் வந்தால் ,நன்மையையும் ,தீமையும் கலந்து வரும் ,ஏதாவது ஒரு நீச கிரகம் லக்கினத்தில் அமர்ந்து பாவ கிரகத்தின் பார்வை லக்கினத்தில் வந்து   7 ல் சூரியனும் 10 ல் ராகுவும் வந்தால் எந்த காரியத்திலும் தோல்வியும் - பாக்ய தடையும் வரும்.,

லக்கினம்  - லக்கினாதிபதி  இருவரும்  பலமுடையவரானால்   10 ல் ராகு டாக்டர் தொழிலில் நிபுனாராக்குவார் .,

லக்கினத்துக்கு உடையவர் சனி ,செவ்வாய் ,ராகு இவர்கள் யாராவதுடன் சேர்க்கை 6 மிடத்தில் அமர்ந்தால் - கண்நோய் பாதிக்கும்.,

சூரியன் துர்பலனாக  லக்கினத்தில் அமர்ந்து அந்த சூரியனை செவ்வாய் பார்த்தால் - டி - பி நோய் ,ஆஸ்துமா ,முதலிய வியாதிகளால் தொல்லைகள் ஏற்படும் .,

செவ்வாய் லக்கினத்தில் சூரியன் அல்லது சனியுடைய பார்வை வந்தால் நெருப்பு ஆயுதம் இவைகளால் உடலில் காயம் ஏற்படும்.,
கேது பாப கிரகங்களின் பார்வையுடன் லக்கினத்தில் அமர்ந்தால் பேய்  பில்லி சூன்யம் ,செய்வினைகளில் நம்பிக்கை உள்ளவனாவான் .,

புதன் லக்கினத்துக்கு கேந்திர பாவங்களில் அல்லது திரிகோணம் பாவங்களில் எங்கேயாவது உச்சம் -நட்பு முதலிய ஸ்தான பலவானாக அமர்ந்தால் - கலைகளில் நிபுணர் ,தர்மசிந்தனை ,பொது மக்களின் கருணை,இவைகள் உண்டாகும்.,

லக்கினத்துக்கு உடையவன் ல்க்கினத்திலும் 9 குடையவன் 9 ம மிடத்திலும் அல்லது இருவரும் இணைந்து லக்கினத்தில் அமர்ந்தாலும் அல்லது இவர்களுக்கு  குரு பார்த்தாலும் சேர்க்கை ஏதாவது வந்தாலும் அதிர்ஷ்டம் நிரந்தரமாக இருக்கும்.,

புதன், மற்றும்  4குடையவன் இணைந்து பாபக்கிரக பார்வை சேரக்கை இன்றி லக்கினத்தில் அல்லது 4 ம்  இடத்தில் அமர்ந்தால் - ஜாதகன் பெரிய அறிவாளியாக இருப்பான் .,

புதன் லக்கினத்திலிருந்து 4ம பாவத்துக்குடையவன் இருவரும் ல்க்கினத்து உடையவனுடன் இணைந்து இஷ்ட பாவங்களில் அமர்ந்தாலும் பெரிய அறிவாளி ஆவான்.,லக்கினத்துக்கு உடையவன் அமர்ந்த ராசியின் 12 மிடத்தில் ல்க்கினாதிபதியுடைய பகை கிரகங்களில் ஒருவர் - பகை வீட்டு நீசம் முதலிய கஷ்ட பாவங்களில் வந்தால் -பிறந்த ஊர் விட்டு வெளிதேசத்தில் வாழ்வான் .,

ல்க்கினத்துக்குடையவன் பாபகிரகமாக 6 மிடத்தில் அல்லது சனி சேர்க்கையில் சிம்ம ராசியில் அமர்ந்தால்  தீய பழக்கங்களுக்கு ஆளாவான் .,
லக்கினத்தில் அமர்ந்த கிரகம்தன் நீசம் பகைவீடு இவ்விடங்களில் அம்சம் பெற்றால் உடல் பிணி இருந்து கொண்டே இருக்கும் .,ல்க்கினத்துக்குடையவன் தன பகைவர்களின் மத்தியில் ( 2, 12 ) பாவங்களில் அமர்ந்தால் பயம் சந்தேக புத்தி மனதில் இருந்து கொண்டே இருக்கும் .,

லக்கினத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து லக்கினாதிபதி பலமில்லாமல் இருந்தால் உடல் வியாதியால் பீடை வரும் .,

லக்கினாதிபதி பலமில்லாமல் கேந்திர திரிககோனங்க்களில் அமர்ந்தால் அதிகமான முன் கோபம் வரும் .

லக்கினத்தில் சுபக்கிரகமும் ,2 லிலும் ,கேந்திரங்களிலும் பாபக்கிரகங்களும் ,லக்கினாதிபதி சுபநவாம்சத்திலும் இருந்தால் முதற்கால வாழ்க்கை துன்பமும், பிற்கால வாழ்க்கை நன்மையையும் தரும்.,ல்க்கினாதிபதியுடைய நவாம்ச ராசிநாதன் கேந்திரம் ,திரிகோணம்  ,11,. உச்சம் முதலிய இஷ்ட பாவங்களில் பலமானால் பிற்காலத்தில் குணம் அதிகமாக வந்தடையும்.,

லக்கினத்தை சூரியன் பார்வை செய்தால் அரசாங்க வேலை ,பதவி உயர்வு ,தகப்பனின் சொத்து இவைகளால் நன்மை உண்டாகும்.,
லக்கினத்தை சந்திரன் பார்த்தால் தண்ணீர் மூலமாகவோ அல்லது கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மூலமாக தன லாபம் உண்டாகும்.,( மீன்,போட்டு,கப்பல்,மருந்துகடை,டீக்கடை) லக்கினத்தை செவ்வாய் பார்த்தால் உற்சாகம்,தர்மசீலம்,போதை பொருட்கள்,பழக்கம் முதலிய பலன் உண்டாகும்.,

லக்கினத்தை புதன் பார்வை செய்தால் கல்வி ,குணம்,புகழ்,இவைகளினால் பலன்உண்டாகும்.,

லக்கினத்தை குரு பார்வைசெய்தால் ,பணம்,பொருள்,இவையுடன் பெண்கள்போகத்தில் திறமைசாலி ஆவார்.,

லக்கினத்தை சனி பார்வைசெய்தால் கெட்ட பழக்க வழக்கமும் உடல் வலிமைகுறைவும்,வயதில் மூத்தவர்களுடன் உடலுறவும்ஏற்படும்,
ல்க்கினத்து உடையவன் எந்த பாவத்தை பார்த்தாலும் அந்த பாவம் பூரண நலம் பெறும்.,

எப்படி என்றால் லக்கினாதிபதி 8 ல் பார்த்தால் பூரண ஆயுள் பலன் கிடைக்கும்.,9 ல் பார்த்தால் பாக்கியம் பெருகும் .,10 ல் பார்த்தால் வேலையில் பொறுப்பும் ,உற்சாகமும் உண்டாகும்,
இப்படி லக்கினாதிபதி எந்த பாவத்தை பார்த்தாலும் அந்த பாவத்துக்கு நல்ல பலன் கிடைக்கும்

*சுபம்*
-------------

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-