எண் ஜோதிடம் ===============

எண் ஜோதிடம்
===============
உங்கள் பிறந்த தேதி
1 = எங்கும் ,எதிலும் தாங்கள் தான் முதல் என்ற உணர்வு இருக்கும் ,உடல் சூடு சற்று அதிகம் ,அவசரபுத்தி சிவ வழிபாடு ஆர்வம் ,தான் இல்லை எனில் பூமி சுற்றுவது நின்று விடும் என்பார் ,வீட்டில் மூத்த குழந்தையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் அடிக்கடி உடல் மனம் சோர்வு அடைவார்
2 = தனித்து இயங்கும் ஆற்றல் இருக்காது ,எங்கு சென்றாலும் துணைக்கு ஒருவர் வேண்டும் , குளிர்சியான உடல் குரல் இனிமையாக இருக்கும் ,தாய் பாசம் அதிகம் ,அம்மன் வழிபாடு செய்வார் ,காரண காரியம் கூறுவதில் திறமைசாலி ,சில நாட்கள் அதிக சந்தோஷம் ,சில நாட்கள் அதித துக்கம் என இருப்பார்
3 = நான் சொல்லி கொடுத்தேன் அவன் பணக்காரன் ஆகி விட்டான் என சொல்வார்,பிறரை வாழ்க்கையில் ஏற்றி விடும் இடத்தில் இருபார் ,தான் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார் ,இவரிடம் அறிவுரை கேட்டவன் வெற்றி அடைவான் ,குரு போன்ற அறிவுரை அள்ளி அள்ளி வழங்குவார் .
4= இரவில் படுக்கும் போது கவலையோடு படுப்பார் ,காலையில் பெரும் ஆற்றல் உடன் எழுவார் ,எங்கு இருந்து அந்த ஆற்றல் வந்தது என்று அவருக்கே தெரியாது ,அடிக்கடி நண்பர்களை மாற்றுவார் ,இவர் புகழ்கிறார் என்றால் நாம் கவனமாக இருக்கனும் ,கடன் கொடுத்தவன் அதனை மறந்து விடனும் ,பசி என்று யார் கேட்டாலும் பசியாற்றும் குணம் உண்டு ,பயணத்தை விரும்புவார் ,பிற பெண்கள் மீது மோகம் இருக்கும்
5= என் மருமகன் மாதிரி உலகத்தில் நல்லவர் இல்லை என்ற பெருமைக்கு சொந்தகாரர் ,பஞ்சு மெத்தையும் ,வெறும் தரையும் சமம் என்பார் , இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு தன்னை மாற்றி கொள்ளும் சுபாவம் இருக்கும் ,தாய் மாமன் யோகம் உண்டு ,இவர் இருக்கும் இடம் கலகலப்பு இருக்கும் ,கையில் காசு இருந்தா ராஜா ,
தான் பெரும் செல்வந்தன் என்ற உணர்வு இருக்கும்
6= அடுத்தவன் காசில் எல்லா சுகமும் ஆட்டையம் போடும் யோகம் இருக்கும் , இவர் அருகில் செல்ல பணம் படைத்தவனுக்கு மட்டும் அனுமதி ,ஜாலியான மனிதர் ,காதலும் காமமும் இரு கண்கள் ,பெண்களால் விரும்பப்படும் நபர் ,இவரை சுற்றி பெண்கள் கூட்டம் இருக்கும் ,ஆடம்பர பிரியர் ,அடுத்தவன் பணம் இவர் வசம் இருக்கும் ,பெருமாள் பக்தன் .குறிப்பாக பணக்கார பெருமாள் ,தங்கம் விருப்பம் உண்டு
எண் கணிதம் தொடர்கிறது
=========================
7 = யாரையாவது பார்த்த உடன் உங்கள் கவலைகளை சொல்லனும் போல் தோன்றினால் அவர்தான் இவர் , ஞானம் உடையவர் ,பின்னால் நடக்க கூடிய விசயங்களை முன் சொல்வார் , எதிலும் ஒரு தத்துவம் சொல்லுவார் ,பணகஷ்டம் இவர் சொத்து ,பிள்ளையார் இஷ்ட தெய்வம் ,சித்த மருத்துவம் சொல்லுவார் ,எல்லா விசயத்திலும் நுனிப்புல் அறிவு உண்டு ,தன் அறிவால் தன்னை நிலை நிறுத்துவார்
8= வாழ்க்கையில் தற்கொலை செய்ய முயற்சி செய்வார் அல்லது 30 வயதுக்குள் உயிருக்கு ஆபத்தான கண்டம் வந்து விலகும் ,சந்தோஷம் ஆன நேரத்திலும் சோக கீதம் பாடுவார் ,வாழ்க்கையின் தரை மற்றும் உச்சம் இரண்டையும் பார்த்தவர் ,இவருடன் நட்பாக இருப்பது கடினம் ,கண் திருஷ்டி போடுவதில் வல்லவர் ,அடிநாக்கில் கரும் புள்ளிகள் இருக்கும் ,இவரிடம் சாபம் பெற கூடாது
9 =தாய் ,தந்தை இருவரையும் விட்டு விலகிய பிறகு வெற்றி உண்டு ,பூமி யோகம் உண்டு ,அழுகும் பொருட்கள் மூலம் செல்வம் வரும் , முன் கோவம் வரும் ,சாந்தம் ஆன பின்பு வருந்துவார் ,ருசியான உணவு வேண்டும் ,
  ராசியான மனிதர் ,பெரும் செல்வம் சேரும் யோகம் உண்டு.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-