மைத்ர முகூர்த்தம்
மைத்ர முகூர்த்தம்
பாலு சரவண சர்மா
கடன் தொல்லை நீங்க - அடமானம் மீட்க - நிதி நெருக்கடி விலக,
கடனை திருப்பித்தர நல்ல நாள் நேரம் :-
மைத்ரேய முகூர்த்தம் என்றால் செவ்வாய் கிழமையும் அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் சேரும் நாளில் அஸ்வினி இருக்கும் வேளையில் மேஷ லக்னம் அல்லது அனுஷம் இருக்கும் வேளையில் விருச்சிக லக்னம் காலமே மைத்ரேய முகூர்த்த காலமாகும்
(மேலே தரப்பட்டுள்ள நேரம் இலங்கை தென்முனை முதல் ஹைதராபாத் (இணையான கோவா) வரை மட்டுமே பயன்படுத்த முடியும், வெளிநாடுகளுக்கு ஊரின் புவிநிலை அறிந்து கணிக்க வேண்டும். இது அப்படியே பொருந்தாது)
செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் ஹோரை காலை 6 - 7 அல்லது மதியம் 1 - 2 இருக்கும் காலத்தில் மைத்ரேய முகூர்த்தம் வருமேயானால் மிகவும் விசேஷமானது.
மாதம் தோறும் அஸ்வினி, அனுஷம் வருகை தந்தாலும், செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து பகல் வேளையில் மைத்ரேய முகூர்த்தம் வருடத்திற்கு சிலநாட்களே வரும்.
மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பணம் கடன் கொடுத்தல்-வாங்கல் கூடாது என்பதால் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் ஒரு நாழிகை வரை சூரிய வெளிச்சம் இருக்கும் காலத்திற்கு முன்னர் மைத்ரேய முகூர்த்தம் வரின் நன்று
மைத்ரேய முகூர்த்த வேளையில் சிறிய அளவிற்காவது வங்கி கடன்(Bank Loan), நகை கடன் (Jewellery loan), வீட்டு அடமானம் (Housing mortgage loan), கடன் அட்டை(Credit card loan) கடனை திருப்பி தந்தால் வெகுவிரைவில் பெருங்கடன் தொகை அடைக்கப்பட்டு நிம்மதி கிட்டும்.
மாற்று தினங்கள்
1.மேத்ரய முகூர்த்த நாளில் இயலாத சூழலில் செவ்வாய் கிழமையுடன் அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் சேரும் நாளில் லக்னம் நள்ளிரவு வந்தாலும் அன்று கடனை அடைத்தல் நன்று.
2.அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷ லக்னத்திலும், அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சிக லக்னத்திலும் கடன் அடைக்கலாம். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று வரும் (இது முழுமையான மைத்ரய முகூர்த்தம் அல்ல சுமார் 66% மைத்ரய முகூர்த்தமாகும்)
3.பிறந்த திதி, வாரம், நட்சத்திரம் ஆகியவற்றில் கடனை திரும்பி தருவது நன்று.
வழிபாடு:
கணகதாரா ஸ்தோத்திரம் வெள்ளிக்கிழமையில் படித்தல் நன்று, வீட்டில் லக்ஷ்மி படத்திற்கு லட்சுமி அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்து பூஜித்தால் கடன் தொல்லை நீங்கி வளம் பெறலாம்.
வேண்டுகோள்:
கடன் உள்ள காலங்களில் இறைவழிபாட்டிற்காக பொருட்செலவு செய்தல், பணம் செலவு செய்தால் கூடாது. இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கி கற்பூரம்கூட ஏற்றக்கூடாது. இறைவனை மனதால் துதித்தலே அதிக பலனை தரும்.
ஹோமங்கள்:
லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்தல் நன்று (எச்சரிக்கை: எக்காரணம் கொண்டும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் அதிக செலவாகும் ஹோமங்களை செய்யவேண்டாம். சாதாரண வழிபாடே போதுமானது)
மைத்ர முகூர்த்தம் நாட்களில் கடன் திருப்பி தந்து முழகடனும் நீங்கி நல்அமைதியான வாழ்வு வாழ இறைவன் அருளட்டும்
Comments
Post a Comment