Posts

அன்னதானம்:-

நமது கர்மவினையை மாற்றும்சக்திஅன்னதானம் நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்; காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும். ஆதாரம்: (சிவபுராணம்).பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,அந்த துவாதசி அன்னதானத்தை நமது ...

பலதார யோகத்தை தடுக்க பரிகாரம் -

பலதார யோகத்தை தடுக்க பரிகாரம் கணவனுக்கு பல தாரயோகம் இருப்பது  தெரிந்தால் ஒவ்வொரு வருடமும் உங்கள் திருமண நாளில் ஒரு மஞ்சள் சரடை உங்கள் கழுத்தில் கட்டி வந்தால் அவருக்கு வேறு பெண்களுடன் திருமணமோ அல்லது எந்த விதமான தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லமால் செய்து விடும் ஆனால் அந்த நாளில் வசதி குறைவாக உள்ள 3 சுமங்கலி பெண்களுக்கு  அன்னதானம் செய்து தாம்பூல தட்சனை தர வேண்டும் 

மகா சிவராத்திரியின் உண்மையான விளக்கம் :-

மகா சிவராத்திரியின் உண்மையான விளக்கம் மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேக அர்ச்சனைகளைப் பார்க்கலாம். முதல் ஜாமம்: பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம். இரண்டாம் ஜாமம்: சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம். மூன்றாம் ஜாமம்: தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம். நான்காம் ஜாமம்: கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேதம். மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி :- சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது உண...

தாலி:-

* அழுக்குக் கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்.* பெண்கள் அணிந்துள்ள தாலிக் கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது.  இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

ஜென்ம நட்சத்திரம் :-

ஒருவர் தனது ஜென்ம நட்சத்திர வடிவத்தை நோய் ஆட்கொண்டிருக்கும்போதோ அல்லது மனதில் அதிக பயம் ஏற்படும் போதோ அல்லது எதிரியை தாக்கவோ பயன்படுத்தலாம். எனக்கு கேட்டை - கேட்...

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்! தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.  * திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.  * இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பா...

ஆவிகள் பற்றி மனதில் பயம் இருப்பவர்கள் :-

ஆவிகள் பற்றி மனதில் பயம் இருப்பவர்கள் பங்குனி சுவாதி நட்சத்திர நாளில் காரைக்கால் அம்மையாரை, திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வணங்கலாம். அமானுஷ்ய சக்திகள் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் உண்டு. குறிப்பாக, மரணத்துக்கு பின்னர் என்னதான் ஆகிறது..? என்பதை அறிந்து கொள்ள மனித குலம் இந்த நூற்றாண்டு வரையில் முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. மகான்களின் கருத்துப்படி மரணத்தின் மூலம் உடலின் மீதான தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, உடல் சம்பந்தப்பட்ட அனைத்துவித உறவுமுறைகளும் அறுபட்டு விடுகின்றன. காரணம் முந்தைய பல்வேறு பிறவிகளின் உறவுகள் உள்ளிட்ட சகல தொடர்புகளும் சம்பந்தப்பட்ட உடலை விட்டு பிரிந்த நபர் (உடல் தொடர்பு அறுந்த பிறகு ஆண், பெண் வித்தியாசங்கள் இல்லை), அடுத்த கட்ட நகர்வுகளை வழிநடத்தும் இயற்கையின் பெருவிதிகளுக்கு ஆட்பட்டு செயல்படவேண்டியதாக ஆகி விடுகிறது. ஆனால், வாழும் காலத்திலேயே ஒரு பெண் அடியவர், தனது அழகிய பெண் உருவத்தை பேய் வடிவமாக மாற்றிவிடும்படி இறைவனிடம் இறைஞ்சிய நிகழ்வு நமது ஆன்மிக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்ட புனிதவதியின் மேன்மையை உ...