Posts

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள்

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் , என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும்.தெரிந்து கொள்ளுங்கள் அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் மாசி, பங்குனி, ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, ஏன் போககூடாது என்ற  காரணத்தைப் பார்க்கலாம் இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது. பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது. இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது. பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம். மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது. மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது. இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

எந்த ராசிக்காரர் எந்த கோயிலிற்கு சென்றால் நன்மை:-

எந்த ராசிக்காரர் எந்த கோயிலிற்கு சென்றால் நன்மை:- மேஷம் :- மேஷத்தில் பிறந்த நீங்கள், சிங்கம்போல இருப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும், குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் 5-ம் இடம், சிம்ம ராசிக்கு உரியது. அதற்கு அதிபதி சூரியன். எனவே, உங்களைவிட உங்கள் பிள்ளைகள் புத்திக்கூர்மையும், செல்வ வளமும் பெற்றிருப்பார்கள். உங்கள் ராசிக்கு உகந்தவை மலைத் தலங்கள். அதிலும், முருகன் அருளும் மலைத்தலங்களைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக, பழநி திருத்தலம். தனித்தன்மை பெறவேண்டும் என்ற தாகத்தோடு முருகப்பெருமான் வந்து அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலம் பழநி. ஆகவே, எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு. அசுவினி : இந்த நட்சத்திரக்காரர்கள் மகான்களின் ஜீவ சமாதிகளைத் தரிசித்து வரலாம். திருச்செந்தூர் தலமும் உகந்தது. பரணி : அழகர் மலைக்குச் சென்று கள்ளழகரைத் தரிசித்து வாருங்கள். கிருத்திகை முதல் பாதம்: நாகப் பட்டினம்-திருவாரூர் பாதையில் உள்ள சிக்கல் தலத...

சாஸ்திர_விதிகளில் சில:-

சாஸ்திர_விதிகளில்_சில_துளிகள் :- 1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். .2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது. 3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். 4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது .5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. 6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. 7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம். 8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது .9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும். 10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும். 11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்த...

தும்பை முலிகையின் மகிமை:-

தும்பை:- தும்பை இலை சாற்றினால் பாதரசத்தை சுத்திசெய்யலாம். ரசமணிகளை தும்பை இலையை அரைத்து அதனுள் வைத்து புடம் போட்டால் யட்சனிகளை வசியப்படுத்தும் வல்லமை பெறும். தும்பை வேருக்கு முறைப்படி காப்பு கட்டி எடுத்த வேர் மஹா வசியமாகும். தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் குடித்து வர அலர்ஜி தீரும். தும்பைச் செடியை, இலை, பூ நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும். தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 10 மி.லி அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும். தும்பை இலைகளை அரைத்து 5 நாட்கள் வரை தொடர்ந்து, உடலில் பற்றிட கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாகும். அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து 100மி.லி அளவு குடித்து வர  விக்கல் சரியாகும். தும்பை இலையையும், மிளகையும் அரைத்து, மேலே  பூச விஷம் இறங்கும். தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் சாப்பிட  தேள் கடி விசம் நீங்கும். தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் ...

எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் கிடைக்கும்:-

எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் கிடைக்கும்: மேஷம் : வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியை தருவார். ரிஷபம் :🌹🌿 சதுர்த்தியன்று சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு பின் வெண்தாமரை மலரை கொண்டு விநாயகருக்கு பு+ஜை செய்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு அவரின் அருட்பார்வை நிச்சயம் கிடைக்கும். மிதுனம் : 🌹🌿 செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நல்லது. கடகம் :🌹🌿 சங்கடஹர சதுர்த்தியன்று சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு கணேசனுக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும். சிம்மம் :🌹 🌿 வெள்ளிக்கிழமை காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு வி...

அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள்:-

ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் 01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி 03. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்) 06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான் 07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்) 08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி 12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி 13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி 14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான். 17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர். 18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) 19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர் 20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான். 22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்) 23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்...

மந்திர சித்தி :-

” மந்திர சித்தி பெறுவது எப்படி ?” மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சிலவழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு...