விவசாய ஜோதிடம்:-

சுந்தரானந்தர் கூறும் விவசாய ஜோதிடம்:-

1.நிலங்கள் வாங்க நல்ல முகூர்த்தம்:
புதன் கிழமைகளில் கடக லக்னத்தில் பரணி திருவோணம் அஸ்தம் அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் நிலம் வாங்க மேன்மேலும் விருத்தியாகும்.

2.நிலம் உழுவதற்கான நல்ல முகூர்த்தம்:
திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில்
வளர்பிறை துதியை பஞ்சமி தசமி திரயோதசி திரிதியை சப்தமி ஏகாதசி திதிகளில்
புனர்பூசம் பூசம் அனுசம் மூலம் அஸ்தம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி ரேவதி ரோகிணி நட்சத்திரங்களில்
கன்னி மிதுனம் கடகம் ரிஷபம் தனுசு மீனம் துலாம் சிம்ம லக்கினங்களில் பாதாள யோகினி இல்லாத நாட்களில் கலப்பை கொண்டு ஏர் உழுவதற்கு நல்ல முகூர்த்தமாம்.

3.விதை விதைக்க நல்ல முகூர்த்தம்:
திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில்
துதியை திரிதியை பஞ்சமி திரயோதசி தசமி ஏகாதசி பௌர்ணமி திதிகளில்
மூலம் ரோகிணி பூசம் உத்திரட்டாதி சதயம் திருவோணம் அஸ்தம் மகம் விசாகம் சுவாதி ரேவதி நட்சத்திரங்களில் 
சிம்மம் ரிஷபம் மிதுனம் கும்பம் கடகம் துலாம் மகரம் மீனம் லக்கினங்களில் 
விதை விதைக்க நல்ல முகூர்த்தமாம்.

4.நாற்று நட நல்ல நாட்கள்:
விதை விதைக்க சொன்ன முகூர்த்த நாட்களில் பாதாள யோகினி கரிநாட்கள் மரணயோகம் இல்லாத நாட்களை கண்டறிந்து பூமாதேவியை வணங்கி நாற்று நடவேண்டும்.

5.கதிர் அறுக்க முகூர்த்தம்:
திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில்
துதியை திரிதியை பஞ்சமி தசமி திரயோதசி பௌர்ணமி சப்தமி திதிகளில்
பூசம் அஸ்தம் மிருகசிரீடம் திருவோணம் ரேவதி உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி அனுசம் விசாகம் பரணி திருவாதிரை மகம் ரோகிணி நட்சத்திரங்களில்
துலாம் ரிஷபம் மிதுனம் கன்னி கடகம் தனுசு மீனம் லக்கினங்களில்
சனி பலம் பெற்றிருக்க
கதிரறுத்து தேவதைக்கு பூஜை செய்து பொலிபோட நெல் தானியம் பெருகும்.

6.தானியங்களை களஞ்சியத்தில் சேகரிக்க முகூர்த்தம்:
சனி திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில்
வளர்பிறை பஞ்சமி தசமி திரயோதசி திரிதியை துதியை ஏகாதசி சப்தமி பௌர்ணமி திதிகளில்
அசுவினி அனுசம் சுவாதி உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி பரணி திருவாதிரை பூசம் மகம் புனர்பூசம் ரோகிணி மிருகசிரீடம் திருவோணம் அஸ்தம் மூலம் பூரம் பூராடம் பூரட்டாதி ரேவதி நட்சத்திரங்களில்
ரிஷப சிம்ம மீன லக்கினங்களில்
குளிகனுள்ள நேரத்தில்
தானியங்களை களஞ்சியத்தில் சேகரிக்க வேண்டும்.

7. களஞ்சியத்திலிருந்து தானியம் எடுக்க முகூர்த்தம்:
சனி வியாழக்கிழமைகளில்
துதியை திரிதியை ஏகாதசி பஞ்சமி திரயோதசி பௌர்ணமி தசமி திதிகளில்
அசுவினி புனர்பூசம் மிருகசிரீடம் ரேவதி அவிட்டம் பூரம் பூராடம் பூரட்டாதி திருவோணம் பூசம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி அஸ்தம் பரணி ரோகிணி சுவாதி திருவாதிரை அனுசம் மூலம் நட்சத்திரங்களில்
கன்னி மிதுனம் ரிஷபம் துலாம் தனுசு மீனம் சிம்மம் லக்கினங்கள் அமைந்த நேரத்தில் களஞ்சியத்தை உரிமையாளன் திறந்து கன்னிப் பெண் சுமங்கலியை கொண்டு தானியங்களை எடுக்க சொல்ல தானியம் விருத்தியாகும்.

8.நெல் அவிக்க நல்ல முகூர்த்தம்:
திங்கள் செவ்வாய் புதன் வெள்ளி சனி கிழமைகளில் நெல் அவிக்க நன்மை உண்டாம்.
ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை நெல் பிறந்த நாட்கள் என்பதால் அவிக்கலாகாது.
அமாவாசை கார்த்திகை நாட்களில் நெல்லவிக்க தீமை உண்டாகும்.

9. புதிய அமுது உண்ண முகூர்த்தம்:
திங்கள் புதன் வியாழன் வெள்ளிக் கிழமைகளில்
பஞ்சமி தசமி பௌர்ணமி துதியை திரயோதசி ஏகாதசி திரிதியை திதிகளில்
சுவாதி ரோகிணி மூலம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி புனர்பூசம் பூசம் அஸ்தம் சதயம் பூராடம் ரேவதி அனுசம் மிருகசிரீடம் திருவோண நட்சத்திரங்களில்
ரிஷபம் சிம்மம் கன்னி கடகம் மீனம் லக்கினங்களில்
கரி நாட்கள் குருட்டு நாட்கள் மரணயோகமுள்ள நாட்களை தவிர்த்து மற்றைய நாட்களில் புதிய அமுது பொங்கல் செய்து உண்ண நன்மையுண்டாம்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-