Posts

Showing posts from 2022

கடல் நீர் பரிகாரம் :-

♻️*சமுத்திர தீர்த்தத்தை இப்படி வீட்டில் தெளித்தால் காணாமல் போகும் உங்கள் வீட்டைப் பிடித்த தரித்திரமும் தீயசக்திகளும்* 🔯தண்ணீரை வீடு முழுக்க இப்படித் தெளித்தாலே போதும். உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் தலை தெறிக்க வெளியே ஓடிவிடும். மீண்டும் தரித்திரம் உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து கூட படுக்காது. 🔯ஒரு மனிதனுக்கு பணம் காசு நிறைய இருக்கின்றதோ இல்லையோ, நிம்மதி என்ற நான்கு வார்த்தை ஒரு வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். மனது நிம்மதியாக இல்லை என்றால் நாம் வாழக்கூடிய வாழ்க்கையே அர்த்தம் இல்லாமல் போய்விடும். நிம்மதி இல்லை என்றால் ஒரு வேளை சாப்பாட்டை கூட நம்மால் மனநிறைவோடு சாப்பிட முடியாது. தேவைக்கு ஏற்ப பணமும், சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கையுமே இல்லரத்தை இனிமையாக மாற்றும். உங்களுடைய வீட்டில் திடீரென்று காரணமே இல்லாமல் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கிறதா? வீட்டில் மன நிம்மதி கெடும் அளவிற்கு சம்பவங்கள் நடந்துகொண்டே வருகின்றதா? 🔯சந்தோஷம் உங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக மன நிம்மதி உங்கள் வீடு தேடி வரும். வீட்டில்...

அமாவாசை பரிகாரம் :-

*அமாவாசை தினத்தில் பெண்கள் 1 சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும். முன்னோர்களுக்கு இருக்கும் எப்பேர்பட்ட கோபமும் தணிந்து, அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்று விடலாமே!*  *நம்முடைய வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு முன்னோர்களுடைய கோபமும் ஒரு காரணம் தான். முன்னோர்களுடைய கோபம் என்றால், அவர்கள் மனம் வருந்தி என்றைக்குமே நம்மை திட்டி சாபம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம்மை மறந்து விட்டார்களே என்று அவர்களுடைய மனதில் சிறியதாக ஒரு ஏக்கம் இருந்தால் கூட, அந்த ஏக்கம் நமக்கு சாபமாக மாறி விடும். அது நம்மை மட்டுமல்லாமல் நமக்கு அடுத்து வரக்கூடிய, அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் அளவிற்கு இந்த சாபம் பொல்லாதது என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று.*   *முன்னோர்களுக்கு நாம் செய்யும் கடமையை தவறாமல் செய்து வர வேண்டும். இதற்காகத்தான் அமாவாசை வழிபாடு, அவர்கள் இறந்த திதி அன்று தர்ப்பணம் கொடுக்கும் வழிபாடு என்று முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் நம்முடைய சாஸ்திரத்தில் தான் எப்போதுமே ஆண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடு, பெண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடு இருக்கின்றதே! ஆணும் பெண்ணும் சமம் என்று எவ்...

மோட்ச தீபம் ஏற்றும் முறை:-

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: கேள்வி: மோட்ச தீபம் ஏற்றும் வழி: தேவையானவை: 1. வாழை இலை 2. பச்சை கற்பூரம் 3. சீரகம் 4. பருத்தி கொட்டை 5. கல் உப்பு 6. மிளகு 7. நவ தானியம் 8. கோதுமை 9. நெல் (அவிக்காதது) 10. முழு துவரை 11. முழு பச்சை பயறு 12. கொண்டை கடலை 13. மஞ்சள் (ஹைபிரிட் இல்லாதது) 14. முழு வெள்ளை மொச்சை 15. கருப்பு எள் 16. முழு கொள்ளு 17. முழு கருப்பு உளுந்து 18. விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42 விளக்குகள் 19. தூய பருத்தி துணி (கை குட்டை அளவு) - 21 20. சுத்தமான நெய் விளக்கு ஏற்றும் முறை: எல்லா பொருள்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நினைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை ஆறு மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந...

பாடல் பெற்ற ஸ்தலங்கள்:-

நிச்சயம் நம் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!  *தேவாரம் பாடல்  பெற்ற தலங்கள்*  1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44. 2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்           --- 52. 3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                   --- 13. 4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                     ----  2. 5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள்                        ---- 111. 6. அப்...

விவசாய ஜோதிடம்:-

சுந்தரானந்தர் கூறும் விவசாய ஜோதிடம்:- 1.நிலங்கள் வாங்க நல்ல முகூர்த்தம்: புதன் கிழமைகளில் கடக லக்னத்தில் பரணி திருவோணம் அஸ்தம் அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் நிலம் வாங்க மேன்மேலும் விருத்தியாகும். 2.நிலம் உழுவதற்கான நல்ல முகூர்த்தம்: திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில் வளர்பிறை துதியை பஞ்சமி தசமி திரயோதசி திரிதியை சப்தமி ஏகாதசி திதிகளில் புனர்பூசம் பூசம் அனுசம் மூலம் அஸ்தம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி ரேவதி ரோகிணி நட்சத்திரங்களில் கன்னி மிதுனம் கடகம் ரிஷபம் தனுசு மீனம் துலாம் சிம்ம லக்கினங்களில் பாதாள யோகினி இல்லாத நாட்களில் கலப்பை கொண்டு ஏர் உழுவதற்கு நல்ல முகூர்த்தமாம். 3.விதை விதைக்க நல்ல முகூர்த்தம்: திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில் துதியை திரிதியை பஞ்சமி திரயோதசி தசமி ஏகாதசி பௌர்ணமி திதிகளில் மூலம் ரோகிணி பூசம் உத்திரட்டாதி சதயம் திருவோணம் அஸ்தம் மகம் விசாகம் சுவாதி ரேவதி நட்சத்திரங்களில்  சிம்மம் ரிஷபம் மிதுனம் கும்பம் கடகம் துலாம் மகரம் மீனம் லக்கினங்களில்  விதை விதைக்க நல்ல முகூர்த்தமாம். 4.நாற்று நட நல்ல நாட்கள்: விதை விதைக்க சொன்ன முகூர்த்த நா...