குளிகை கால முகூர்த்தம்?
குளிகை கால முகூர்த்தம்?
==========================
குளிகை காலத்தில் நடைபெறும் காரியம் திரும்பத் திரும்ப நடைபெறும் என்பதற்காகவும், அந்த நேரத்தில் செய்யும் நிகழ்வுகளில் கர்த்தா அடிக்கடி கலந்து கொள்ள நேரிடும் என்பதாலும் அசுப காரியங்களை குளிகை காலத்தில் செய்யக் கூடாது என்பதை சாஸ்திரம் மூலமாக தங்கள் அனுபவத்தை சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
சுபகாரியங்களை இந்த நேரத்தில் செய்தால் அதுவும் திரும்ப நடந்தால் நல்லது தான் என்பதற்காக இந்த காலத்தில் சுபகாரியங்களை செய்யலாம் என்றும் கூறி இருக்கிறார்கள்.
ஆனால் நாம் நம் வாழ்வில் நடக்கும் அனைத்து சுபகாரியங்களுக்கும் அதை பொருத்திப் பார்க்கக் கூடாது. எதையெல்லாம் சாஸ்திரம் கூறும் நல்வழியில் திரும்பத் திரும்ப செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோமோ அவற்றையெல்லாம் கட்டாயமாக குளிகை காலத்தில் செய்து கொள்ளலாம். அதாவது மானுட வாழ்வில் நடக்கும் விஷேசமான பொது சுபகாரியங்கள் அல்லாது அன்றாடம் நடக்கும் சுபங்களான வீடு, மனை, வாகன ஒப்பந்தம், கிரயம், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துதல், சுபகாரியங்களை பேசத் துவங்குதல், பொருளாதார நடவடிக்கைகளை துவங்குதல் (கடன் வாங்குவது, அதற்காக விண்ணப்பம் கொடுப்பது தவிர) முதலியன போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்.
திருமணம், சீமந்தம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் முதலியன போன்ற பொதுவான சுபகாரியங்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
மேலும் மருத்துவமனை செல்லுதல், மருந்துண்ண ஆரம்பித்தல், துக்க காரியத்திற்கு வீட்டிலிருந்து கிளம்புவது முதலிய விஷயங்களையும் குளிகை காலத்தில் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஆக குளிகை காலத்தில் முகூர்த்தங்களை குறித்துக் கொடுக்கக் கூடாது.
முன்னோர்கள் கூறியதை அவர்கள் வழிநின்று உண்மையை அறிந்து பின்பற்றுவதே மிகச் சிறப்பு.
Comments
Post a Comment