வாழ்க்கையை மாற்றும் தெய்வீக ரகசியங்கள்
வாழ்க்கையை மாற்றும் தெய்வீக ரகசியங்கள்
செம்பு ஜல ஸ்நானம் இது சிவபெருமான் ராவணனுக்கு உபதேசித்த ஒன்றாகும்தினசரி செம்பு பாத்திரத்தில் குளித்து வர நீண்ட நாள் துன்பங்கள், தடைகள் ஒரு முடிவுக்கு வரும், மேலும் கங்கையில் குளித்த புண்ணியத்தை தரக்கூடியது
தொழில் மற்றும் பணியில் சுனக்கமா?வீட்டி அல்லது பணிசெய்யும் இடத்திலயோ சரியாக இயங்காத கடிகாரம் இருக்கா என்று பாருங்கள் அல்லது தெற்கு பக்கம் பார்த்து உள்ள கடிகாரம் இருக்கா என்று பாருங்கள் இருந்தால் மாற்றினாலே போதும்.
புதிய சுவர் கடிகாரம் வாங்கி வடக்கு அல்லது கிழக்கு பக்கம் பார்த்து இருக்குமாறு பொறுத்தவும் 3 நிமிடங்கள் அதிகமாக வைத்து கொள்ளவும்.அனைத்து சுனக்கமும் மாறும்
எப்போது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதோ, உங்களைத் தேடி கெட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், வீண் செலவுகளால் பணம் கையில் நிற்கப் போவதில்லை என்றும் அர்த்தம்.
பணம் திரும்பி வரகொடுத்த நியாயமான பணம் திரும்பி வர, வாங்கிய கடன் விரைவில் அடைபட , அபகரிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க,
இரண்டு பசுக்களுடனும், மயிலுடனும் ஆனந்தமாக குழல் இசைத்து கொண்டிருக்கும் கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வடக்கு நோக்கி வைத்து வழிபட மேற்கண்ட அசுபங்கள் சுபமாகும்.
ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர
சிகப்பு துணியில் 11 உலர்ந்த பேரீட்ச்சைகளை முடிந்து, வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் இடத்தில் அல்லது பொன், பொருள், ஆடைகள் வைத்துள்ள இடத்தில் வைக்க, வாழ்வில் சுக போகங்கள் மேம்படும். மாதம் ஒரு முறை பழையதை அகற்றி விட்டு, புதிதாக செய்யவும். இதை எந்த நாளிலும்-நேரத்திலும் செய்யலாம்.
சந்திராஷ்டமம் எளிய பரிகாரம்
அரிசி மாவை நீரில் குழைத்து உடல் முழுதும் 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு வழக்கமான முறையில் குளித்து விட்டு, மருந்து கடைகளில் கிடைக்கும் வெள்ளை பிளாஸ்திரியை மிக சிறிய அளவில் வெட்டி, அதில் ஒரு நெல் மணியை வைத்து நம் இடது கை புஜத்தில் ஒட்டி கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்கலாம். எளிய ஆனால் மிக சக்தி வாய்ந்த முறை.
Comments
Post a Comment