யோகி, அவயோகி பற்றிய விளக்கம்

யோகி, அவயோகி பற்றிய விளக்கம்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சந்திரனுடைய பாகையையும், சூரியனுடைய பகையையும் கூட்டி வருவது யோகம் ஆகும். இதனை யோகப்புள்ளி என்று அழைக்கலாம்.
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
நித்திய நாம யோகம் = சந்திரன் பாகை + சூரியன் பாகை
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
நித்திய நாம அதிபதியே யோக அதிபதி ஆவார். இவர் வேறு, யோகி வேறு ஆவார். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
(ஒரு சிலர் இதனுடன் 93 பாகை 20 கலை கூட்டி யோகம் காணவேண்டும் என கூறுகின்றனர். அது தவறு. 93 பாகை 20 கலை கூட்டி காணப்படுவது யோகி ஆவார். யோக அதிபதி வேறு, யோகி வேறு. கீழே விளக்கயுள்ளேன்) 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
நித்திய நாம யோகம் 27 ஆகும். அவைகளின் பொருள் ஆனது
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
விஷ்கும்பம் ~~ விஷமுள்ள பானை 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சிலர் இதனை விஷ்கம்பம் என்று கூறுகின்றனர். விஷ்கம்பம் என்றால் தாங்கி பிடித்தல் என்று பொருள். ஆனால் விஷ்கும்பம் தீமையான யோகமாக கூறப்பட்டுள்ளதால் தாங்கிபிடித்தல் (விஷ்கம்பம் ) என்பதை விட விஷம் இருக்கும் பானையே (விஷ்கும்பம் ) பொருளில் சரியாய் வருகிறது.
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
ப்ரீதி ~~ அன்பு, காதல்.
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
ஆயுஷ்மான் ~~ நீண்ட ஆயுள்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
செளபாக்யம் ~~ நல்ல அதிர்ஷ்டம்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
ஷோபனம் ~~ அழகு , நல்லொழுக்கம். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
அதிகாண்டம்  ~~அதிக தடை
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சுகர்மம் ~~நல்ல செயல், 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
த்ருதி ~~ நிம்மதி, உறுதி
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சூலம் ~~ ஈட்டி
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
கண்டம் ~~ தடைகள்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
விருத்தி ~~ஏறுதல்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
துருவம்  ~~நிலையானது
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
வியாகதம் ~~படுகொலை
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
ஹர்ஷணம் ~~மகிழ்ச்சி
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
வஜ்ரம் ~~இடி 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சித்தி ~~சாதனை அடைதல்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
வியதிபாதம் ~~பெரிய பேரழிவு
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
வரியான் ~~சிறந்தது, உயர்ந்தது
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
பரிகம் ~~தாழ்ப்பாள் (கதவினை மூடுவதற்கான இரும்புப் பட்டை)
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சிவம் ~~புனிதமானது
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சித்தம் ~~முழுமை
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சாத்யம் ~~சாதிக்கக்கூடியது
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சுபம் ~~புனிதமானது
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சுக்லம் ~~  தூய்மையானது
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
பிரஹ்மா ~~தெய்வீக ஆதாரம்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
இந்திரன் ~~தலைவர்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
வைத்ருதி ~~கைது, பிடித்தல்
================================
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

யோக அதிபதி, யோகி, அவயோகி கண்டுபிடித்தல்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சந்திரனுடைய பாகையையும், சூரியனுடைய பகையையும் கூட்டி வருவது யோகம் அல்லது யோகப்புள்ளி ஆகும். இதன் அதிபதி‌ யோக அதிபதி ஆவார். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சந்திரனுடைய பாகையையும், சூரியனுடைய பகையையும் கூட்டி அதனுடன் 93 பாகை 20 கலை கூட்டி யோகி  கிரஹம் பொதுவாக காணப்படுகிறது. . 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
யோகி்= சந்திரன் பாகை + சூரியன் பாகை + 93.20 பாகை. 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
ஏன் 93 பாகை 20 கலை கூட்ட வேண்டும் என்ற காரணத்தை யாரும் சொன்னதாக தெரியவில்லை. 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
ஏன் 93 பாகை 20 கலை கூட்ட வேண்டும் என்ற கேள்விக்கு எனக்கு தனிப்பட்ட ஒரு கருத்து இருக்கிறது. அதனை நான் வத வைநாசிகத்திலிருந்து எடுத்திருக்கிறேன். இதனை புரிந்து கொள்வதற்கு முன்னர் நாம் முதலில் வத-வைநாசிகத்தினை புரிந்துகொள்ள வேண்டும். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
ஒரு நக்ஷத்திரத்தில் இருந்து 22வது நக்ஷத்திரம்  வத-வைநாசிகம் ஆகும். வத என்றால் 7, 
வைநாசிக என்றால் 22 ஆகும். ஜென்ம நக்ஷத்திரத்தில்‌ இருந்து வைநாசிகம் 22 வது நக்ஷத்திரமாகவும், வைநாசிகத்தில் இருந்து ஜென்ம நக்ஷத்திரம் 7 வது நக்ஷத்திரமுமாக வருவதால் இது வத- வைநாசிகம் என்று அழைக்கப்படுகிறது. 22 வது நக்ஷத்திரம் வத- வைநாசிகம் என்று அழைக்கப்பட்டாலும் 88ம் பாதமே உண்மையில் வத - வைநாசிகம் ஆகும். இது இறப்பினை குறிக்கும் பாதம் ஆகும். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

சரி வத-வைநாசிகம் என்பது நக்ஷத்திரம் தொடர்பானது இதற்கும் யோகத்திற்கும் என்ன தொடர்பு என கேட்டீர்களானால், யோகமும், நக்ஷத்திரமும் சம தூரம் உடையது அதாவது 13 பாகை 20 கலை கொண்டது, எனவே நக்ஷத்திரத்திற்கு காணக்கூடிய அத்தனை விஷயங்களையும் நாம் யோகத்திற்கும் காணலாம்
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
ஜாதகர் பிறந்த யோகத்தில் இருந்து 22 வது யோகமான வத-வைநாசிக யோகமே அவயோகம் என அழைக்கப்படுகிறது. அவயோகம் இருக்கும் நக்ஷத்திர அதிபதி அவயோகி என்று அழைக்கப்படுகிறார். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
அவயோகிக்கு நேர் எதிர் நக்ஷத்திர அதிபதி யோகி ஆவார். அதாவது வைநாசிக யோகத்திலிருந்து 14வது  யோக அதிபதி  யோகி ஆவார். இது ஜென்ம யோகத்திற்கு 8வது யோகமாய் வரும். எனவேதான் 8வது யோகம் கிடைக்க ஜென்ம யோகத்துடன் 7 யோக கால அளவான (7 × 13.20 = 93.20)  93 பாகை 20 கலை கூட்டி 8வது யோக அதிபதியான யோகி கணக்கிடப்படுகிறது
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
பொதுவாக நக்ஷத்திரமும், யோகமும் ஒரே அளவில்‌ ராசி மண்டலத்தில் தொடங்கி‌ முடிகிறது. 
எனவே  யோக அதிபதி, யோகி, அவ யோகி கணக்கிட நாம் நக்ஷத்திரத்தினை கணக்கிடுவது போலவே கணக்கிட்டு கொள்ளலாம். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
உதாரணத்திற்கு, 
விஷ்கும்பத்தில் பிறந்தவருக்கு 
முதல் யோகமான விஷ்கும்பமும்,  முதல் நக்ஷத்திரமான அசுவனியும் ஒரே அளவில் ஒத்து இருக்கும். இதனால் இவருக்கு யோக அதிபதி கேது ஆவார். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
அசுவனிக்கு வத வைநாசிக அதிபதியான 22வது நக்ஷத்திர (திருவோணம்) அதிபதியான சந்திரனே வைநாசிக கிரஹம் ஆவார்.இந்த சந்திரனே அவயோகியும் ஆவார். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
திருவோணத்திலிருந்து 14வது நக்ஷத்திரமான பூசத்தின் அதிபதி சனி யோகி ஆவார். இதிலிருந்து வைநாசிகம் அவயோகியாகவும், அதற்கு எதிர் நட்சத்திர அதிபதி யோகியாகவும் இருக்கிறது என்பதால்தான் 93 பாகை 20 கலை கூட்டப்படுகிறது என்பது என்னுடைய புரிதல், கருத்து ஆகும். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
பொதுவாக ஒன்றுக்கொன்று 7ம் பாவம்
உதித்தல் -மறைதல்,
வளர்ச்சி- வீழ்ச்சி,
உதயம் -மறைவு போன்றவற்றினை தரும். அவயோகி‌ மறைவு என்றால், யோகி உதித்தல் ஆவார். எனவேதான் அவயோகிக்கு 14ம் நக்ஷத்திரத்தில் யோகி கொடுக்கப்பட்டுள்ளது. 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ஒரு சிலர் சந்திரன், சூரியன் பாகையினை கூட்டி அதிலிருந்து அயனாம்சம் கழித்து,  யோகி அவயோகி கணிக்கவேண்டும் என கூறுகின்றனர். உதாரணத்திற்கு முதல் யோகமான விஷ்கும்பத்திலிருந்து தற்போதைய அயனாம்சம்  24 பாகை 8 கலை கழித்தோமானால் அது உத்திரட்டாதியில் அமையும்.  எனவே உத்திரட்டாதியின்  அதிபதியான சனி யோகியாகவும் அதற்கு நேர் எதிரில் இருக்கும் ஹஸ்தம் நக்ஷத்திரத்தின்  அதிபதியான சந்திரன் அவ யோகியாகவும் இருப்பர் எனக் கூறுகின்றனர். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
எனினும் நான் என்னுடைய கருத்தான வத- வைநாசிக முறையே அவயோகிக்கு‌ மிகவும் சரியாக வருகிறது என்று நினைக்கிறேன். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
=============================
யோக அதிபதி தசை
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
யோகியை வைத்துக்கொண்டு எவ்வாறு பலன் கூறுவது என்று இது வரை யாரும் தெளிவாக கூறியதில்லை. 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
என்னுடைய பல வருட ஜாதக பலன் புரிதலில் பல்வேறு ஜாதகங்களை பார்த்தபொழுது யோகி கொண்டு பலன் காணுவதற்கு நான் விம்சோத்தரி தசையை எடுத்துக் கொள்கிறேன். இது என்னுடைய கருத்து, முறை ஆகும். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
இதனால் தான் யோகி, அவயோகி அதிபதியாக விம்சோத்தரி தசா நாதனை கொடுத்துள்ளனர். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
யோகத்தின் புள்ளியை அதாவது யோக அதிபதி‌ கொண்டு தசா நாதனை கண்டு விம்சோத்தரி தசை கணித்து, பாதத்தில் சென்றது போக மீதி உள்ளவற்றை கொண்டு அடுத்தடுத்த தசைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலன் பார்க்கும்பொழுது எந்த காலகட்டத்தில் ஜாதகர் சிறப்பாய் இருந்திருப்பார் என்பதை தெளிவாக காண முடிகிறது. அவ்வாறு கணிக்கும் தசையில் யோகி அவயோகி செய்யும் வேலைகள் கவணித்தாலே நாம் இதனின் சூட்சுமம் புரிந்துகொள்ளமுடியும். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
உதாரணத்திற்கு திருபாய் அம்பானி ஜாதகத்தில் யோகம் துருவம், உத்திரத்தில் அமையும். சூரியன் தசா நாதன் ஆவார்.  
சென்றது போய் இருப்பு அறிய பாதம் தேவை.  
சந்திரன் -3,  சூரியன் -4 கூட்ட 7, 
4 க்கு மிகுந்ததால்
4 கழிக்க 3 பாதம். 
யோகி நாதனின் தசை வருடம் 6 ல்  3 வருடம் போக மீதி 3 வருடம் இருக்கும். 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

பின் சந்திரன் 10 வருடமும்,  பின் 7 வருடம் செவ்வாய் தசையும், அதன் பின் அவயோகி ராகு தசையும்  சிறப்பான பலன் தரவில்லை. பிறகு வந்த சக யோகியான குரு தசை ஜென்ம யோகமான துருவத்தில அதாவது உத்திரத்தில் இருந்து தசையை நடத்தியதால் மிகப்பெரிய வளர்ச்சி தந்தது. பிறகு 5ல் ஆட்சி பெற்ற சனி தசையும்  நல்ல யோகத்தை தந்தது. 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
இதனை நீங்கள் பிரபலங்களின் ஜாதகங்களில்  பயன்படுத்தி யோக அதிபதி கொண்டு கணிக்கப்படும் விம்சோத்தரி தசை கொண்டு சரியான பலனை கணிப்பதற்கு இது உதவுகிறது. 
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-