திருமண தடைகள்:-

பிருகு நந்தி நாடியில் - தாமத திருமணம்
-------------------------------------------------------------------
 அல்லது திருமண தடைகள் அதன் 
----------------------------------------------------------
பரிகாரங்கள்
----------------------
ஆண்:
 ஜாதகர்- குரு  களத்திர காரகன் - சுக்கிரன்
1.குருவிற்கு  4,6,8,10 சுக்கிரன் இருந்தால் தாமத திருமணம் அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.
 பரிகாரம்:
 குலதெய்வ வழிபாடு செய்யவும் 
2 .குரு , சுக்கிரன் 4-10, 6-8 ஆக இருந்து இவற்றை ராகு கேது அச்சு பிரித்தால் திருமண வாழ்வில்  / தருமணம் நடப்பதில் பிரச்சனை இருக்கும்
 பரிகாரம்:  வேறு ஜாதி அல்லது வேறு இனத்தில்  அல்லது பொருளாதாரத்தில் கீழே உள்ள பெண்ணை திருமணம் செய்யவேண்டும்.
 3. சூரியன் சுக்கிரன் இடைவெளி 42 டிகிரிக்குமேல் இருந்தால் அல்லது 5 டிகிரிக்குள் இருந்தால் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் இருக்கும்.
 பரிகாரம்: பெண் குலதெய்வ வழிபாடு, சுமங்கலி பூஜை செய்யவும் . நவராத்திரியில் கொலு வைத்து வணங்கலாம் 
4 .சனி -க்கு 1,2,5,9,12 ல் சந்திரன் இருப்பது தாமத திருமணம் அல்லது திருமணத்தில் தடை ஏற்படும்.
 பரிகாரம்: கோவிலில் கிணறு வெட்டுதல் அல்லது பொதுமக்களுக்கு நீர்மோர் பானகம் போன்ற சேவை செய்தல்.
 5. சனி -க்கு 1,2,5,9,12 ல் சுக்கிரன் இருந்தால் தாமத திருமணத்தை கொடுக்கும் அமைப்பாகும்.
பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.
 6.சுக்கிரனுக்கு 1, 2 ,7 ,12 ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாமல் இருத்தல் இது திருமணத்தடை/ திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரும்.
 பரிகாரம்: வீட்டில் இறந்த கன்னிப்பெண் அல்லது திருமணமாகி இறந்த பெண்ணிற்கு திதி கொடுக்கவேண்டும்.
7.ராகு-கேது அச்சிற்கு வெளியே சுக்கிரன் தனித்து இருப்பது. இதனால் தாமத திருமணம்/திருமண வாழ்வில் பிரச்சினைகளை வரும்.
 பரிகாரம்:
 ஸ்ரீரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வழிபட வேண்டும் 
8 .குரு - சுக்கிர பரிவர்த்தனை. இந்த அமைப்பு, திருமணத்தில் பிரச்சனை / திருமணமானபின்  கணவன் மனைவிற்கிடையே ஈகோ (ego) ப்ராப்ளம் வரும்.
 பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்வது நன்று.
9. குரு-ராகு சுக்கிரன்- கேது இந்த இணைவு திருமணம் நடப்பது சிரமம்.
பரிகாரம்: துர்க்கையை , விநாயகரை வழிபடவும் வேண்டும் 
10. குருவிற்கு 3 ,11 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருப்பது .இந்த அமைப்பு கொம்டவர்கள் 26 அல்லது 27 வயதுக்கு மேல்தான் திருமணம் நடக்கும் .
 11. சூரியன், சுக்கிரன் பரிவர்த்தனை இதனால் திருமணத்தில் / திருமண வாழ்வில் பிரச்சினைகள் வரும்.
12. சுக்கிரனுக்கு 1 ,2 ,5 ,9 ,12 ஆகிய இடங்களில் குரு வக்கிரம் பெறுவது.
 பரிகாரம் : 10,11,12 ஆகிய மூன்றிற்கும்
குலதெய்வ வழிபாடு சிறந்த பரிகாரமாகும்.
பெண்:
 சுக்கிரன்- ஜாதகி செவ்வாய் -களத்திர காரகன் 
1. சுக்கிரனுக்கு 4,6,8,10 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பது தாமத திருமணத்தைக்  கொடுக்கும்.
 பரிகாரம்: துர்க்கை , முருக வழிபாடு செய்யவேண்டும்.
 
2. சுக்கிரன் செவ்வாய் 4-10 அல்லது 6-8 இருந்து அவற்றை ராகு கேது அச்சு பிரித்தல். இது திருமண வாழ்வில் பல பிரச்சினைகளைக் கொடுக்கும் .
பரிகாரம்: துர்க்கை மற்றும் விநாயகர் வழிபாடு நல்ல பலன் தரும்.
3.  சூரியன், சுக்கிரன் இடைவெளி இடைவெளி 42 டிகிரிக்குமேல் இருந்தாலோ அல்லது 5 டிகிரிக்குள் இருந்தாலோ திருமண தடை / பிரச்சனைகளை சந்திப்பர்
 பரிகாரம் : குலதெய்வ வழிபாடு ,சுமங்கலி பூஜை செய்ய வேண்டும்.
4 . செவ்வாய்க்கு 1,2 ,7 ,12 ஆகிய வீடுகளில் கிரகம் இல்லாமல் இருப்பது திருமண தாமதத்தை/ திருமணத்தடையை கொடுக்கும் .
பரிகாரம் : முருக வழிபாடு, ரத்த தானம் செய்தல் நன்று
5 .சுக்கிரனுக்கு  1,2,5,9 ஆகிய இடங்களில் ராகு இருப்பது திருமணத்தடையை கொடுக்கும்.
 பரிகாரம்: துர்க்கை வழிபாடு  செய்து வரவும்.
6.செவ்வாய் - கேது இணைந்து 5 டிகிரிக்குள் ஒரு கட்டத்தில் இருந்தால் திருமணத்தில் பிரச்சினைகளைக் கொடுக்கும் .
 பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்யவேண்டும்.
7.செவ்வாய்-ராகு இணைந்து ஒரே கட்டத்தில் 5 டிகிரிக்குள் இருந்தால் திருமணத் தடை/ திருமண வாழ்வில் பிரச்சனைகளை கொடுக்கும் .
பரிகாரம்:துர்க்கை வழிபாடு செய்வது நன்று.
8. செவ்வாய்க்கு 1,2,5,9,12 ஆகிய இடங்களில் சனி  இருப்பது திருமணத்தடை/ திருமண வாழ்வில் சிக்கல் உண்டாகும்.
9. செவ்வாய் -சனி பரிவர்த்தனை திருமணத்தில் பிரச்சனைகளை உண்டாக்கும் .
பரிகாரம்: மேற்கண்ட 8,9 ற்கு முருக வழிபாடு நல்ல பலனைத் தரும்.
10. சூரியன்- செவ்வாய் இடைவெளி 5 டிகிரிக்குள் இருந்தால் திருமண வாழ்வில் சிக்கல் கொடுக்கும் .
பரிகாரம் :சஷ்டியன்று முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
11. சூரியன்- சுக்கிரன் பரிவர்த்தனை. இந்த  அமைப்பு திருமணத்தில் பிரச்சனைகள்/தடை ஏற்படுத்தும்.
 பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்வது நன்று
12. ராகு கேது அச்சிற்கு வெளியே செவ்வாய் தனித்து இருத்தல் தாமத திருமணம் அல்லது திருமண பந்தத்தில் பிரச்சினைகளைக் கொடுக்கும் .
பரிகாரம் : முருக வழிபாடு செய்தல் நன்று.
13. சுக்கிரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 2 ,5 ,9, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தால் 26/27 வயதிற்குள் திருமணம் செய்யவேண்டும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நண்மை தரும்.
 


Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-