குழந்தை பிறப்பு:-
குழந்தை பிறப்பு மற்றும் அதன் சில விளக்கங்கள்
--------------------------------------------------------------
சூரியன் - புத்திரகாரகன் - ஆணுக்கு விந்தணுவை குறிப்பவர்
குரு - கருமுட்டை - பெண்ணுக்கு கருமுட்டையை குறிப்பவர்
சுக்கிரன் (பொது) - பெண்ணுக்கு கருப்பைகளையும், ஆணுக்கு சுக்கிலத்தை குறிப்பவர்
கீழே தரப்பட்டுள்ள சில சேர்க்கையினால் குழந்தை பிறப்பில் தடைகளும், தாமதங்களும் தருகின்றன
# ஆண் ஜாதகத்தில் எந்த மாதிரியான சேர்க்கை எவ்வாறெல்லாம் தடையை ஏற்படுத்துகிறது?
1. சூரியன் + சனி (எதிரி கிரஹம்)
--------------------------------------------------------
சூரியன் நின்ற ராசிக்கு 1, 5, 9, 12 ல் புத்திர ப்ராப்தியை தடை ஏற்படுத்தும் பகை கிரஹமான சனி இருந்தால் - தாமத புத்திர பாக்கியம் - பொதுவாக இந்த சேர்க்கையினால் தாமதம் ஏற்படுவதை குறைவாக தான் காண முடிகிறது.
2. சூரியன் + சுக்ரன்
--------------------------------------------------------
சுக்கிரன், சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் > 42 இருந்தாலோ (பொது - இரு பாலருக்கும்)
சுக்கிரன், சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் < 5 ஆக (மகா அஸ்தங்கம்) இருந்தாலோ (பொது - இரு பாலருக்கும்)
- விந்தணு இயக்க கோளாறு (mobility issues) / விந்தணு நீர்த்துப்போதல்
# பரிஹாரம் – * குறிப்பாக குலதெய்வ வழிப்பாடு மிக முக்கியம். இவர்களது குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது, * சுமங்கலி பூஜை வழிபாடு
3. சூரியன் + ராகு
--------------------------------------------------------
சூரியன் நின்ற ராசிக்கு 1, 5, 9, 2 ல் புத்திர ப்ராப்தியை தடை ஏற்படுத்தும் பகை கிரஹமான ராகு இருந்தால்,
- அசாதாரண விந்தணு எண்ணிக்கை (fluctuations)
# பரிஹாரம் – * குலதெய்வ வழிப்பாடு மிக முக்கியம், * ராகு சேர்க்கை எனில் - துர்கை வழிப்பாடு
4. சூரியன் + கேது
--------------------------------------------------------
சூரியன் நின்ற ராசிக்கு 1, 5, 9, 2 ல் புத்திர ப்ராப்தியை தடை ஏற்படுத்தும் பகை கிரஹமான கேது இருந்தால்,
- விந்தணு எண்ணிக்கை குறைபாடு
# பரிஹாரம் – * குலதெய்வ வழிப்பாடு மிக முக்கியம், * கேது சேர்க்கை எனில் - பிள்ளையார் வழிப்பாடு
5. சூரியன் + செவ்வாய் (அஸ்தங்கம்)
--------------------------------------------------------
சூரியன் நின்ற ராசிக்கு 1, 5, 9, 2 ல் புத்திர ப்ராப்தியை தடை ஏற்படுத்தும் செவ்வாய் இருந்தால்,
- தாம்பத்திய குறைபாடு ஏற்படும்
## பெண் ஜாதகத்தில் எந்த மாதிரியான சேர்க்கை எவ்வாறெல்லாம் தடையை ஏற்படுத்துகிறது?
1. சுக்ரன் + சூரியன்
--------------------------------------------------------
சுக்கிரன், சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் > 42 இருந்தாலோ (பொது - இரு பாலருக்கும்)
சுக்கிரன், சூரியன் டிகிரி இடைவெளி வித்தியாசம் < 5 ஆக (மகா அஸ்தங்கம்) இருந்தாலோ (பொது - இரு பாலருக்கும்)
- உடலில் அதிகமான சூடு ஏற்படுகிறது இதனால் கருச்சிதைவு உண்டாகும் சத்தியம் இருக்கும்.
# பரிஹாரம் – * குறிப்பாக குலதெய்வ வழிப்பாடு மிக முக்கியம். இவர்களது குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது, * சுமங்கலி பூஜை வழிபாடு
2. சுக்ரன் + சந்திரன்
--------------------------------------------------------
சுக்கிரனுக்கு 1, 2, 5, 9 இல் சந்திரன் இருந்தால் - நீர்க்கட்டி, PCOD, சுரப்பிகள் பிரச்சனை, கருப்பை பலம் குறைதல், இரண்டும் நீர் கிரஹம். ஆதலால் கருமுட்டை வெளியேறுதல், வெள்ளை படுதல் போன்ற பிரச்சனைகளை காண முடிகிறது.
# பரிஹாரம் – ஆடி பூரம் அன்று அம்பாளுக்கு வளையல் சாற்றுவது
3. சுக்ரன் + ராகு
--------------------------------------------------------
சுக்கிரனுக்கு 1, 2, 5, 9 இல் ராகு இருந்தால் - கருப்பை வாய் அகலமாக இருத்தல். இதனால் கரு வெளி ஏறுதல்
# பரிஹாரம் – * குலதெய்வ வழிப்பாடு மிக முக்கியம், * ராகு சேர்க்கை எனில் - துர்கை வழிப்பாடு
4. சுக்ரன் + கேது
--------------------------------------------------------
சுக்கிரனுக்கு 1, 2, 5, 9 இல் கேது இருந்தால் - கருப்பை சுருங்கி இருத்தல், கருப்பையில் கட்டி ஏற்படலாம்
# பரிஹாரம் – * குலதெய்வ வழிப்பாடு மிக முக்கியம், * கேது சேர்க்கை எனில் - பிள்ளையார் வழிப்பாடு
5. குரு + ராகு
--------------------------------------------------------
குருக்கு 1, 2, 5, 9 இல் ராகு இருந்தால் - கருமுட்டை பிரச்சனைகள். அசாதாரணமாக இருத்தல் (abnormalities)
# பரிஹாரம் – * குலதெய்வ வழிப்பாடு மிக முக்கியம், * ராகு சேர்க்கை எனில் - துர்கை வழிப்பாடு
6. குரு + கேது
--------------------------------------------------------
குருக்கு 1, 2, 5, 9 இல் கேது இருந்தால் - கருமுட்டை தடை குருவோ / சுக்கிரனோ - பலமாக பாதிக்கப்பட்டால் அல்லது குரு + ராகு (மிக அருகிய degrees) treatment முறையில் குழந்தை ஏற்படும்.
# பரிஹாரம் – * குலதெய்வ வழிப்பாடு மிக முக்கியம், * கேது சேர்க்கை எனில் - பிள்ளையார் வழிப்பாடு
# மேற்சொன்ன அமைப்பு தவிர மேலும் சில கீழே உள்ள கிரஹசேர்க்கை இருக்கும் எனில், புத்திர பாக்கிய தடை ஏற்படுகிறது
- ஆணுக்கு சுக்கிரன் கெட்டுபோனாலோ, பெண்ணுக்கு செவ்வாய் கெட்டுப்போனாலோ - தாம்பத்திய குறைபாடு ஏற்படும்
- பெண் ஜாதகத்தில் - சுக்கிரன் அஸ்தங்கம் / வக்கிரம் ஆனால்,
- பெண் ஜாதகத்தில் - சுக்கிரன், சூரியன் பரிவர்த்தனை பெற்றால் (சுக்கிரன் - சிம்மத்தில், சூரியன் - துலாம்)
Comments
Post a Comment