குளியல் பொடி :-



21 அதி உன்னத மூலிகைகலை கொண்டு முற்றிலும் மேம்படுத்தபட்ட பாரம்பரிய முறையில் வீட்டில்  தயார் செய்த இயற்கையான மூலிகை குளியல் பொடி விற்பனைக்கு.


இன்று நாம் நம் உடல் அழகிற்காகவும், முக பொலிவிற்காகவும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் தீங்கை விளைவிக்கும்  இரசாயன பொருட்கள் கலந்தே உள்ளன. இதை தெரிந்தும் நாம் அதனை தவிர்பதில்லை. இன்றைய நவநாகரீக துரித வாழ்கையில் நாம் பலவற்றை மறந்து இழந்து நிற்கிறோம் அதில் ஒன்று தான் நாம் நம் உடல் அழகிற்காகவும், முக பொலிவிற்காகவும் இயற்கையாக பயன்படுத்திய பொருட்கள். சருமத்தின் அழகினை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம்.

இதன்மூலம் நாம் எதிர்பார்த்த நன்மையைவிட தீமையே அதிகம் வருகிறது. இதை தவிர்க்க  உடலுக்கு இயற்கையான மூலிகை குளியல் பொடியை தேய்த்து குளிக்கலாம்  ஆனால் இயற்கை குளியல் போடி எளிதில் கிடைப்பதில்லை.






பொருட்கள்: 


சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை,

மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல், பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு.


பயன்கள்:


இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகபருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும். இக்குளியல் மாவை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும், முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மேலும் தோல் நோய்கள், தேமல் வராமல் தடுக்கும், அதுமட்டுமின்றி சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக இருக்கும், சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் மறைந்து போகும்.வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும், உர்ச்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் வெயிலினால் உன்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.


இயற்கை மூலிகை குளியல் பொடியை பாலில் கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் வென்மையாக காணப்படும். 


இந்த இயற்கை குளியல் மாவானது பிறந்த குழந்தைகளுக்கும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கும்  ஏற்றது. இனியாவது செயற்கையை தவிர்த்து இயற்கையானதை பயன்படுத்தலாம்


குறிப்பு: நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு நாம் பயன்படுத்தும் இரசாயனப்பொருள் நிறைந்த சோப்பிற்கு செலவிடும் பணத்தை விட இயற்கையான குளியல் மாவிற்கு செலவிடும் பணம் மிகவும் குறைவு.


Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-