தெரிந்த மூலிகை தெரியாத விஷயங்கள்.


தெரிந்த மூலிகை தெரியாத விஷயங்கள்.

கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் பிரகாசம் அடையும் மற்றும் கண்களுக்கும் மூளைக்கும் நல்ல குளிர்ச்சியை தரும்.
புண்கள் மற்றும் அடிபட்ட இடத்தில் இந்த கீரையின் இலையை அரைத்து அதன் மேல் தடவி வர நல்ல பலனை தரும்.

குழந்தைளின் சளிக்கு இந்த கீரை சிறந்து மருந்தாக இருப்பதுடன், கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு அரைத்து மோரில் கரைத்து கொடுத்துவர ஈரல் வீக்கம் குறையும்.
மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கரிசலாங்கண்ணியின் இலைய வேகவைத்து அதை வடிக்கட்டி காலை மற்றும் மாலை குடிக்கவும். கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றி, அந்த எண்ணையை தலைக்கு தடவினால் முடி உதிர்வது குறையும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து, அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை ஏழு நாட்களுக்கு கொடுத்தால் மஞ்சள் காமாலை குணமடையும்.
இதனை சாப்பிடுவது தலைமுடிக்கும், முகப்பொழிவிற்கும் மிக மிக சிறந்தது. . வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக ஆரோக்கியமும் அழகும் மேம்படுகிறது.

கரிசலாங்கன்னி கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இரும்புசத்துமிகுந்திருக்கிறது.பல்,ஈறு சம்பந்தமான நோய்கள் அண்டாது.,முடி நரைக்காது.இரத்தம் சுத்தமடையும்.மது,சிகரெட் நச்சினை உடலில் இருந்து நீக்கும்.

கரிசாலை,சீரகம்,தூதுவேளை,முசுமுசுக்கைஆகிய நான்கையும் பொடித்து சூரணமாக்கி முறையே 8 : 4: 2 என்ற விகிதத்தில் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.இதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து அதில் இந்த சூரணத்தை போட்டு காய்ச்சி ஒரு தம்ளராக சுண்டியவுடன் அதில் நாட்டுச்சர்க்கரை,அல்லது பனைவெல்லம்,அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினந்தோறும் அருந்தி வந்தால் நோய்கள் காணாமல் போகும்,உடல் வலுவடையும்,எந்த நோயும்  அணுகாது.

கரிசலாங்கண்ணி கல்லீரலை உறுதிப்படுத்தும்; வீக்கத்தைக் குறைக்கும்; மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும்; உடலைப் பலமாக்கும்; மலமிளக்கும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

கண் பார்வை தெளிவடைய  கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும்.
இளநரையை தடுக்க  கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலர்த்தி, தூளக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ½ தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளைப் பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.
மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டுவர வேண்டும்.
கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும், இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; நரையும் மாறிவிடும்.
  

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-