வெட்டை,மேகம்,சூலை/பால்வினைநோய் (VD) .!!!
வெட்டை,மேகம்,சூலை/பால்வினைநோய் (VD) .!!!
1.குப்பைமேனி இலையை அரைத்து,200மிலி எருமைப்பாலில் 1நாள் காலையில் கொள்ள வெட்டை தீரும்
2.சந்தனத்தைப்பசும்பாலிலுரைத்து சுண்டைக்காயளவு தினம்2வேளை சாப்பிட்டுவர வெட்டைச்சூடு குணமாகும்
3.யானைநெருஞ்சில் இலையை அரைத்து,எலுமிச்சையளவு,200மிலிபசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டுவர வெட்டைச்சூடு குறையும்
4.கோவையிலைச்சாறு20மிலி,சமன் ந.எண்ணை கலந்து,200மிலி நீராகாரத்துடன் காலையில் சாப்பிட வெட்டை குணமாகும்
5.துத்திவிதைச்சூரணம் 1தேகரண்டி சமன் கற்கண்டு சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட மேகநோய் குணமாகும்
6.நெல்லிச்சாறு,தேன்,எலுமிச்சைசாறு வகைக்கு15மிலி கலந்து காலையில் சாப்பிட்டுவர மதுமேகம் குணமாகும்
7.ஆவாரை பஞ்சாங்க சூரணம் 10கிராம் தினம்3வேளை வெந்நீருடன் கொள்ள மதுமேகம்,பிரமேகம்,மிகுதாகம்,மிகுபசி,உடல்மெலிவு,பலக்குறைவு தீரும்
8.துத்தியிலையை கியாழம் செய்து பால்,சர்க்கரை கலந்து சாப்பிட மேகச்சூடு சாந்தியாகும்
9.தாழை விழுதுகளை அரைத்து பால்,சர்க்கரை கலந்து காய்ச்சி 5-10மிலிதினமிருவேளை உண்டுவர உடல் எரிச்சல்,வெட்டை தீரும்
10.சீமைஅழவனவிதை(எண்ணை உலராதது) பொடித்து 2சிட்டிகை வெந்நீரில் கொள்ள சூலைவலி நிற்கும்
11.புங்கமபூவை நிழலில் உலர்த்தி வறுத்து,பொடித்து 1சிட்டிகை தினம்3வேளை நெய் அல்லது வெணணெமில் நீடித்துக்கொள்ள மதுமேகம், மதுமேகரணங்கள் தீரும்.
12.நெருஞ்சில் சமூலம்1பிடி,கீழாநெல்லி 1பிடி சேர்த்தரைத்து அல்லது சூரணித்து 10கிராம் தினம்2வேளை எருமைத்தயிர் அல்லது மோரில் சாப்பிட்டுவர பிரமேகத்தால்(பால்வினை) உண்டாகும் வெள்ளை,நீர்எரிச்சல்,அசதி,நீரதாரைபுண்கள்,மேககிரந்தி,ஊறல்,தடிப்பு குணமாகும்.
Comments
Post a Comment