*எந்தப் பருவத்துக்கு, எந்தக் கீரை கூடாது?*
*எந்தப் பருவத்துக்கு, எந்தக் கீரை கூடாது?*
கோடைகாலத்தில்
( சித்திரை, வைகாசி) அரைக்கீரை ம ற்றும் புளிச்சகீரையைத் தவிர்க்க வேண்டும்.
காற்று அதிகம் உள்ள காலங்களில்
(ஆனி, ஆடி) அரைக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
முன் மழைக்காலங்களில்
(ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
பின் மழைகாலங்களில்
( ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் கீரைத்தண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
முன் பனிக்காலங்களில்
(மார்கழி, தை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை ஆகியவை வேண்டாம்.
பின் பனிக்காலங்களில்
( மாசி, பங்குனி) சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் பருப்புக்கீரையைத் தவிர்க்கலாம்.
பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை எல்லாப் பருவங்களிலும் சாப்பிடலாம்.
Comments
Post a Comment