தலைமுறை சாபம், தரித்திரம் நீங்கி வம்சம் தலைத்தோங்க
தலைமுறை சாபம், தரித்திரம் நீங்கி வம்சம்
தலைத்தோங்க வில்வ விதைகளை நல்ல சுப நாளில் வாங்கி மண்தொட்டியில் போட்டு தண்ணீர் பசுஞ்சாணம் சிறிது கலந்து தெளிக்க வில்வ கண்டு விதையிலிருந்து துளிர்க்கும்.
தினசரி பஞ்சாட்சரம் செபிக்க வேண்டும் . ஒரு அடி வளர்ந்தவுடன் அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் எதாவது ஒரு சிவன் கோவிலில் நட்டு வைத்து அதை நன்கு பராமரிக்க ஆட்களை நியமிக்கவும். அருகில் இருந்தால் தினசரி தண்ணீர் விட்டு , வேலி அமைத்து கவனிக்கவும் 6 அடிக்கு மேல் வளர்ந்தவுடன் அது தானாகவே தழைக்கும்.
அந்த வில்வ இலைகளை சிவபெருமானுக்கு பயன்படும் பொழுது அனைத்து தீய கர்மா விலகும். பெரும் புகழ் பாக்கியம் உண்டாகும்.
ஈசன் அருளால் நண்மைகள் பல உண்டாகும்.
பரம்பரை தரித்திரம், அடிமை வாழ்வு நீங்கும்.
சிவன் கோவிலில் வைக்க முடியாவிட்டால் கோவில் அருகில் வளர்க்கலாம். அதே பயன் கிடைக்கும். வில்வ மரத்தை வலம் வருவது மகாலெட்சுமியை வலம் வருவதற்கு சமம்.
ஓம் நமச்சிவாய.
Comments
Post a Comment