ஏவல் பில்லி சூன்ய வகைகள் ஏழும் நிவர்த்தியும் !
ஏவல் பில்லி சூன்ய வகைகள் ஏழும் நிவர்த்தியும் !
ஒவ்வொரு சப்தத்திற்கும் ஒரு அதிர்வு உண்டு.
அந்த அதிர்வு நேர்மறையாகவோ
அல்லது எதிர்மறையாகவோ
(Positive or negative) இருக்கும்.
மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவும்
அவற்றைக் கேட்பதின் மூலமாகவும்
நல்ல பலன்களை அடைய முடியும்.
அதே போல்
தீமை விளைவிக்கும் மந்திரங்கள்
தாந்த்ரீகம் அல்லது செய்வினை
செய்வோர்கள் மந்திரவாதிகள் !!
ஏவல் பில்லி சூன்யம் செய்வதில்
பல வகைகள் முறைகள் உண்டு.
1.
காலடி மண் :
ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.
2.
சுடுகாட்டு சாம்பல் :
தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால்
அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.
3.
முட்டை :
மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.
4.
எந்திர தகடு :
நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.
5.
சுண்ணாம்பு :
சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.
6.
எலுமிச்சை :
சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.
7.
மந்திர பாவை (பொம்மை) :
சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக
அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.
இன்னும் :
மோகினியை வைத்து செய்வது,
துர்தேவதைகளை வைத்து செய்வது,
சாத்தானை வைத்து செய்வது
என்று பல வகைகள் உண்டு.
கெடுவான் கேடு நினைப்பான் !
ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன்
அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான்.
ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும்
98 வருடங்கள் துன்பப்பட வேண்டும்.
ஏவல்-பில்லி-சூனியம்-செய்வினைகள் நீங்க வழிமுறை :
தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும்
அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.
செய்வினை நீங்க பரிகாரம் :
செய்முறை…!
1.வெண்கடுகு250 கிராம்
2.நாய்க்கடுகு250 கிராம்
3.மருதாணி விதை250 கிராம்
4.சாம்பிராணி250கிராம்
5.அருகம்புல் பொடி50 கிராம்
6.வில்வ இலை பொடி50 கிராம்
7.வேப்ப இலை பொடி50 கிராம்
இவை அனைத்தும்
நாட்டு மருந்து கடைகளில்
வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.
சாம்பிராணியை மட்டும் பொடி செய்து
மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து
ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில்
அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.
தி்னமும் செய்தால் தவறில்லை.
48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.
குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது
கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது.
மேற்கண்ட எளிய முறையைப் பயன்படுத்தி,
மாந்திரீக கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.
அத்துடன் :
ஒரு சனிக்கிழமையில் சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.
செய்வினை தோஷத்தை விரட்டும்
மற்றொரு பரிகாரம் வருமாறு:-
முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.
அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறந்தோடிவிடும்.
யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து
தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம்
வந்து வணங்கி வர செய்வினை தோஷம் இருந்தால்
யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.
யாரோ சூனியம் வைத்திருப்பதாக நினைத்தால்,
ஆஞ்சநேயரை அனுதினமும் வழிபட்டு
அவருக்கு துளசி மாலை சாத்தி நெய் தீபம் இட,
எப்பேர்ப்பட்ட சூனியமும் ஒண்ணும் செய்ய முடியாது.
செய்வினை பாதிப்புக்கு
குல தெய்வக் குற்றமும்
காரணமாக இருக்கலாம்.
குல தெய்வத்தை மறந்து விடுவதே
இதற்குக் காரணம். எனவே, குடும்பத்தோடு
குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு
நேரில் சென்று வழிபட்டு வந்தால்
செய்த செய்வினை பாதிக்காது.
Comments
Post a Comment