திருஷ்டி பரிகாரம் :-
உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும்..... நம்முடைய வீடானது சந்தோஷமாகத்தான் இருக்கும். வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும். தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட, நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம். யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும...