பரிகாரம் :-

(1) ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது.

(2) நம் சிறுநீரால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது.

(3) கமண்டலத்தில் உரு ஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும்.

(4) அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவு கூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும்.

(5) இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும்.

(6) வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.

(7) வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும்.

(8) வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும்.

(9) பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும்,

(10) வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும்,

(11) மயில் இறகை கையில் வைத்திருந்தாலும்,

(12) எதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும்.

(13) எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் அல்லது தலையில் வைத்து சிறிதுநேரம் பொருத்து அதை காலால் நசுக்கி வீசிவிட்டு காலை கழுவிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும்.

(14) உப்பு தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும், அண்டாது.

(15) துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது. (அதனால் தான் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்த தவசிகள் துளசி செடியை வளர்த்து வழிபட்டனர்.)

(16) ஐவகை எண்ணெய் சேர்த்து எரியவிடும் தீபத்தின் அருகில் தீயசக்தி விலகிவிடும்.

(17) நாய் உடன் இருந்தாலும் தீயசக்தி அண்டாது.

(18) பசுவின் சாணம் பட்ட இடத்திலும் தீயசக்தி அண்டாது, பசுவின் ஜலம் பட்ட இடத்திலும் தீயசக்தி விலகிவிடும்.

(19) நமக்கு மிக நம்பிக்கையான தெய்வத்தை நினைத்து செப்பு தகட்டில் ஒரு சூலம் வரைந்து உடலில் எங்காவது தாயத்து இட்டு அணிந்து கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்.

(20) பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும்.

(21) அமாவாசை இரவில் அகண்ட தீபம் ஏற்றி அதன் அருகில் தூங்காமல் தீபத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாலும் விருப்பம் நிறைவேற வழிபிறக்கும். தீயசக்தியும் விலகிவிடும்.

(22) மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை உற்று நோக்கினாலும் தீயசக்தி அண்டாது விலக வழிகிடைக்கும்.

(23) இடதுகால் மணிக்கட்டில் கருப்பு கயிறில் மந்திரம் ஓதி மூன்று முடிச்சிட்டு கட்டிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும

(24) கல்யாண பூசணியோ அல்லது எலுமிச்சை கனியையோ கத்தியால் சரிபாதியாக வெட்டி குங்குமம் தடவி அமரும் இருபக்கமும் வைத்தாலும் அல்லது வீட்டின் தலைவாயிற்படி இருபக்கமும் வைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.

(25) நம் கையால் பெரிய அளவு உள்ள தேங்காயை நன்கு சிதறும்படி உடைத்தாலும் தீய சக்தி விலகிவிடும்.

(26) நெய், வெண்ணெய், பால் உணவு சாப்பிட்டு அது செரிக்கும் வரை தீய சக்தி அண்டாது. நெய்தீபம் எரியும் இடத்திலும் தீயசக்தி விலகி நிற்கும்.

(27) சுத்த சந்தனம் நெற்றியில் வைத்துக்கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்.

(28) வாசியை உயர்த்தும் பயிற்சி கொண்டவர்களுக்கும், வெளி இடங்களில் தூங்காதவருக்கும், நெற்றிக்கண்ணை கூர்ந்து கவனிப்பவருக்கும், மந்திரம் செபிப்பவருக்கும், சித்தனை அறிவு உள்ளவருக்கும் தீயசக்தி அண்டாது.

       

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-