Posts

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம் ?

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம் ? ------------ 1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் . 2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும் . 3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம்.இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம் . 4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும் . 5, திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும் . 6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம் . 7, பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீரா...

🍃 *மளைவாழ் மக்களின் நாட்டு மருந்து*

*கைகண்ட அனுபவ மருத்துவம்* 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 ‎ 🍃 *நாட்டு மருந்து* கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது. அனைவருக்கும்  *கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!* *நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது* *சில எளிய மருத்துவம்: !!!* *_ஓர் fh பகிர்வு.* *வயிற்றுவலிக்கு:* முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். *இடுப்பில் வரும் வண்ணார் புண்:*  இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும...

கருடபுராணம் - சில தகவல்கள்

கருடபுராணம் - சில தகவல்கள் !!! **************************************************! சமீபத்தில் முகநூலில் என்னை கவர்ந்த ஒரு பதிவை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே. ஆர்வமுள்ளவர்கள் மட்டும் தொடருங்கள் இப்பூமியில் பிறந்த ஓவ்வோரு மனிதனும் இறந்த பின் இறுதியில் எங்கே செல்கிறான் என்ன ஆகிறான் என்பதை விளக்கமாக உரைக்கும் பதிவு இது.. சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச்செல்கிறார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோம் -. இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும். புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா? அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானதுதான். காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித்தள்ளிவிடவும் முடியாது -. காரணம் புராண...

யோகங்கள்

சச யோகம்:-சனி கேந்திரத்தில் இருந்து அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் இந்த யோகத்தைக் கொடுக்கும். இந்த அமைப்புள்ளவர் களுக்கு நல்ல வேலைக்காரர்கள் அமைவர். மற்றவர்கள் சொத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர். ருசக யோகம்:- செவ்வாய் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருந்து அது கேந்திர ஸ்தானமாக இருந்தால் இந்த யோகம் ஏற்படும். நல்ல உடல்வாகு உள்ளவராக இருப்பார். நல்ல பணவளம் உள்ளவராக இருப்பார். எதிலும் தலைமை தாங்கும் திறமை கொண்டவராக இருப்பார்.                             பத்ர யோகம்:- புதன் கேந்திர ஸ்தானங்களிலிருந்து அது புதனின் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாக இருந்தால் அது பத்ர யோகமெனப் படும்.மிகவும் கெட்டிக் காரத்தனம் உள்ளவராக இருப்பார். சாதுர்யமாக நடந்து கொள்வர். புதன் காரகத்துவம் வகிக்கின்றவைகளெல்லாம் சிறந்து விளங்கும். புத-ஆதித்ய யோகம்:- புதனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அதற்கு புத ஆதித்ய யோகமென்று பெயர். மிகவும் கெட்டிக்காரத்தனம் கொண்டவராக இருப்பார். எந்தக் காரியம் செய்தாலும் புத்திசாலித்தனம் அத...

வெண்கடுகு

  ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.  வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும். மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார்.  அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.  எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடு...

கடன் வாங்குவதற்கான ஜோதிட விதிகள்

ராசிகளுக்கும் கடன்வாங்குதல், கடனைதிருப்புதல்,கடன்வாங்கி திண்டாடுதல். ----------------- சர ராசிகளான மேசம்,கடகம்,தூலாம்,மகரம்,போன்றராசிகளில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நாட்களில் கடன்கொடுத்தால்.கொடுத்தது கொடுத்ததுதான் அதுதிரும்பிவரும் என்றுஉத்திரவாதம்இல்லை அதேபோலகடன்வாங்கீனாலும்அதைஅவனால் திருப்பிச்செலுத்தியலாது.கடன் வாங்கிக்கொண்டேஇருக்கும்  நிலைஏற்பட்டுவிடும். ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம் ,விருச்சிகம் ,கும்பம்,இந்தராசிகளில்  சந்திரன் சஞ்சாரம் செய்யும்போது கடன்கொடுத்தால் கொடுத்தபணம்திரும்பாது. வாங்கியவன்திருப்பித்தர இயலாது, உபயராசிகளான மிதுனம் கன்னி தனுசு மீனம்  இந்தராசிகளில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நாட்களில் கடன் வாங்கீனாலும் கொடுத்தாலும் அதுதெடர்கதையாகிவிடும். இந்தராசிகளில் கடன் வாங்கியவன் திருப்பிக் கொடுப்பான்.ஆனால் கொடுக்ககலும் வாங்களும் நிரந்தரமாகிவிடும்.

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட் சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட் சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்... ஒவ்வொரு ஸ்தலமும் கிரகவினை நீக்கவல்ல நல்லாற்றல் நிறைந்தவை... அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர் மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை. பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம். கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம் மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர். ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி. மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண் மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை. திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம் மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம். புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி மற்ற தலங்கள் ...