Posts

தேமல்:-

  தேமல் என்பது இன்று பலரையும் தாக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் எந்த சோப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை உடனடியாக வாங்கி பயன்படுத்துவது என்பது தேமல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உடலுக்கு சோப்பை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை குறைந்தது, வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொள்ளுங்க. இந்த குளியல் பொடியை தினமும் உபயோகித்தாலும் நன்மை தான்… ஆனால், இன்று நறுமணம் தரும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எனவே முடிந்தவரையில் வாரத்தில் இரண்டு தடவைகளாவது சோப்புக்கு பதிலாக இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்துங்கள். மேலும் தினமும் இரவு தூங்கும் போது உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகரிப்பதும் கூட சரும நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை.. உங்கள...

நாட்டு மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:-

1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். 2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும். 3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும். 4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும் பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வலி குறையும். பூ – 30 கிராம் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவ...

கோவிலில் செய்யக் கூடாதவை:-

1. கோவிலில் தூங்க கூடாது. 2. கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது. 3. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். 4. கோயில் குளத்தில் கல்லைப் போடக்கூடாது. 5. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது. 6. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. 7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. 8. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக் கூடாது. 9. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்துப் பேசக் கூடாது. 10. தலையில் துணி ,தொப்பி அணியக் கூடாது. 11. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது (அதாவது கருவறை இருட்டாக இருக்கும் சமயத்தில் இறைவனை வணங்குதல் கூடாது). 12. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது. 13. குளிக்காமல் கோயிலுக்குள் போகக் கூடாது 14. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது. 15. மனிதர்கள் காலில் விழுந்து தெய்வ சன்னதியின் முன்பு வணங்கக் கூடாது. 16. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது. 17. படிகளில் உட்காரக் கூ...

காயத்ரி மந்திரம்:-

*" காயத்ரி மந்திரம்:- காயத்ரி மந்திரம் – விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்… காயத்ரி மந்திரமே! விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் வியந்து போற்றிய காயத்ரி மந்திரம் குறித்த சில தகவல்கள்: காயத்ரி மந்திரத்தினைப்பற்றி சுவாமி விவே கானந்தர் குறிப்பிடும் பொழுது, “மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்” எனக்குறிப்பிட்டு ள்ளார். ஜே பி எஸ் ஹால் டேன் என்ற பிரபல விஞ்ஞானி ( 1892-1964)காயத்ரி மந்திரத்தினைப்பற்றி குறிப்பிடும்பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில் “நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாக வும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக் கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் “பெரிய பெரிய கடுந் தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது” எனக்குறிப்பிட்டுள்ளார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்...

சரும வியாதி நீக்கும் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் :-

சரும வியாதி நீக்கும் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் :- மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து வழிபட்டால் சருமவியாதி தீரும் என்பது நம்பிக்கை. நம் நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும். நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் ஆகும். இங்கே கருவறையில் நாகமே மூலவராக உள்ளது. #நாகர்கோவில் நாகராஜா :- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில். நாகராஜா திருக்கோயில் நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார...

விசக்கடி வைத்தியம்:-

விசக்கடி !!! எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா?? நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது.  ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது.  நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாதநோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன்நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. கடிகளைக் கண்டறிதல்: > இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.  இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், *இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. *புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… *வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு,  நீர் பிரட்டை போன்றவை என்றும்… *கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்… > தேள் கடி மருந்துகள்: *எலுமிச்சைப் பழ வி...

வாழ்வியல் தத்துவம் மருத்துவம்:-

தமிழன் எது செய்தாலும் அதில் ஒரு வாழ்வியல் தத்துவம் மருத்துவம் இருக்கும் !!!! வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டுஇருப்பது திருஷ்டி கயிறு அல்ல.  நம் உயிரை காக்கும்அது முதலுதவி பெட்டகம். நம் வீட்டுவாசலில் கருப்பு கயிற்றில் படிகாரம்,எலுமிச்ச்சைபழம்.மிளகாய்.மிளகு.ஈச்சமுள் மற்றும் மஞ்சள்,தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டுஇருக்கும். கண் திருஷ்டிக்காக என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அது நம்முடைய உயிரைகாக்கதான் தொங்கிக்கொண்டு இருக்கிறது !!! எப்படியென்றால்.... மின் வசதியில்லாத அந்த காலங்களில் நம் வீடுகளீல் இரவில் பொருட்களை தேடுவது மிகுந்த சிரமாம இருந்திருக்கும்.  இரவில் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வரும்போது அக்காலத்தில் தெருக்களிலும் மின்சாரம் இருக்காது. அப்பொழுது ஏதேனும் பூச்சியோஅல்லது பாம்பு மற்ற ஏதேனும் விசபூச்சிகள் கடித்துவிட்டால் என்ன செய்வது? அந்த சூழ்நிலையில் நம்முடைய பதட்டம் அதிகரிக்கும், முதல் உதவி மிக முக்கியம் அல்லவா? அதற்காகதான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நம் வீட்டுவாசலில் தொங்கவிட்டு இருப்பார்கள். கைகளிலோ அல்லது காலிலோ கடிப்பட்ட...