எண் ஜோதிடம் =============== உங்கள் பிறந்த தேதி 1 = எங்கும் ,எதிலும் தாங்கள் தான் முதல் என்ற உணர்வு இருக்கும் ,உடல் சூடு சற்று அதிகம் ,அவசரபுத்தி சிவ வழிபாடு ஆர்வம் ,தான் இல்லை எனில் பூமி சுற்றுவது நின்று விடும் என்பார் ,வீட்டில் மூத்த குழந்தையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் அடிக்கடி உடல் மனம் சோர்வு அடைவார் 2 = தனித்து இயங்கும் ஆற்றல் இருக்காது ,எங்கு சென்றாலும் துணைக்கு ஒருவர் வேண்டும் , குளிர்சியான உடல் குரல் இனிமையாக இருக்கும் ,தாய் பாசம் அதிகம் ,அம்மன் வழிபாடு செய்வார் ,காரண காரியம் கூறுவதில் திறமைசாலி ,சில நாட்கள் அதிக சந்தோஷம் ,சில நாட்கள் அதித துக்கம் என இருப்பார் 3 = நான் சொல்லி கொடுத்தேன் அவன் பணக்காரன் ஆகி விட்டான் என சொல்வார்,பிறரை வாழ்க்கையில் ஏற்றி விடும் இடத்தில் இருபார் ,தான் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார் ,இவரிடம் அறிவுரை கேட்டவன் வெற்றி அடைவான் ,குரு போன்ற அறிவுரை அள்ளி அள்ளி வழங்குவார் . 4= இரவில் படுக்கும் போது கவலையோடு படுப்பார் ,காலையில் பெரும் ஆற்றல் உடன் எழுவார் ,எங்கு இருந்து அந்த ஆற்றல் வந்தது என்று அவருக்கே தெரியாது ,அடிக்கடி நண்பர்களை மாற்றுவார் ,இவர் ப...