கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ரகசிய பரிகாரம்:-

*🙏ஒவ்வொரு ராசியினர்களுக்கும் உண்டாகும் கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ரகசிய பரிகாரம்* 
............................................................................

*மேஷம்*

தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

*ரிஷபம்*

ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்

*மிதுனம்*

தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்- கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும்

*கடகம்*

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

*சிம்மம்*

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்

*கன்னி*

சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.

*துலாம்*

பசும்பாலை சுக்ரஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக கடன் தீரும் வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும். 11 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் தீரும்

*விருச்சிகம்*

லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும். அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் சேர்ந்த கலவை) பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி உண்டாகும்

*தனுசு*

வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

*மகரம்*

சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்

*கும்பம்*

வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.

*மீனம்*,

தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடைபட ஆரம்பிக்கும்- குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-