சாஸ்திரம் :-
ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ ,இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ ,ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ,ஒருவர் உள்ளங்கையாய் இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ , அவர்கள் குணம் வாசனைகளாக நமக்கு வரும் . திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும் ,சண்டை போட கூடாது என்றால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் ,ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் ,இருவர் உள்ளங்கையயும் சேர்த்து பணிகிரஹணம் என்று பிடித்தல் ,ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் ,ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் ,என்று இருவருடைய வாசனைகள் ,குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் .அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால் ,சண்டைகள் குறைந்து ஒற...