Posts

Showing posts from May, 2021

பயண சாஸ்திரம் :

பயண சாஸ்திரம் : பயணத்தின் போது நட்சத்திரங்கள் திதிகள் கிழமைகள் இவற்றில் ஏற்படக் கூடிய அமைப்புகளை கொண்டு நல்ல நேரத்தை கணித்து பயணத்தை சரியான திசையில்  மேற்கொள்ள அந்த பயணம் வெற்றி அடையும் என முகூர்த்த நூல்கள் சொல்கின்றன. அவற்றில் ஒன்று யோகினி நிற்கும் நிலையாகும்... கால விதான பத்ததி/மாலை  எனும் நூலில்...யோகினி நிற்கும் நிலையை திதி சூலம் என்ற தலைப்பில் கூறுகிறார்கள். பிரதமை -நவமி திதிகளில் ....கிழக்கே சூலம் த்விதியை - தசமி திதிகளில் ..வடக்கே சூலம் த்ருதியை- ஏகாதசி திதிகளில்..தென் கிழக்கில் சூலம் சதுர்த்தி-துவாதசி திதிகளில்..தென் மேற்கில் சூலம் பஞ்சமி- திரயோதசி திதிகளில்..தெற்கே சூலம். சஷ்டி- சதுர்தசி திதிகளில்..மேற்கில் சூலம் எனவும்...சூலம்உள்ள திசையில் பயணம் செய்வது  சுபம்அல்ல ..தீமை ஏற்படலாம் என சொல்லுகிறார்கள். இதில் வட கிழக்கு, வட மேற்கு திசைகளுக்கான சூல திதிகள் சொல்லப்படவில்லை..அதாவது சப்தமி அட்டமி அமாவாசை பௌர்ணமி திதிகளுக்கான சூலங்கள் சொல்லப்படவில்லை. கிழமைகளைகளை கொண்டு சூலம் சொல்வதை போல....திதிகளை கொண்டு யோகினியை நிலையை கூறுகிறோம்...இது சம்பந்தமாக முகூர்த்த...

எலுமிச்சம் பழத்தின் மகிமை :-

எலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர்...        எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது...             எலுமிச்சம்பழம் உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது.  ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும் உண்டு. அவை தாவரத்திற்குத் தாவரம் வித்தியாசப்படும். எலக்ட்ரோ மீட்டா் வைத்து அதன் மின் சக்தியை அளக்கலாம். அந்த மின்சக்திக்கு பயோ எலக்ட்ரிசிட்டி எனப் பெயா். இதே மாதிரி அனேக ஜீவராசிகளிலும் மின் சக்தி உண்டு. ஜீவனுள்ள கனி என்பது எலுமிச்சம் பழம்! எலுமிச்சம் பழத் தோப்புக்குள் ஆசாரமில்லாதவா்கள் போனால் அவை வாடி விடும். எலுமிச்சம்பழத் தோட்டத்தில் சாம்பிராணி புகை போட்டுத் தீய சக்தியை விரட்டுவார்கள். "பதார்த்தகுண சிந்தாமணி" என்னும் நூலில் எலுமிச்சம் பழ மருத்துவம் கூறப்பட்டுள்ளது. முன்பு வாழ்ந்த இந்துத் துறவிகள் தங்களுக்கு மாயையினால் தூண்டப்படும் காம சக்தியை அடக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிற...

இந்து தர்ம சாஸ்திரம் :-

இந்து தர்ம #சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்!!! தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம். சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.  அண்ணியை தினசரி வணங்க வேண்டும். பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.  குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.  நெருப்பை வாயால் ஊதக் கூடாது.  கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், ...