மூலிகை சாம்பிராணி வீட்டில் எப்படி செய்வது
சிவசிவ
🙏💐🙏💐🙏💐🙏💐
மூலிகை சாம்பிராணி வீட்டில் எப்படி செய்வது
அசல் சாம்பிராணி
மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை சாம்பிராணி செய்வது குறித்த குறிப்பினை தருகிறேன் அவற்றின் தன்மை மாறாமல் இருக்க சுத்தமான எதுவும் கலக்காத அசல் சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கேட்டுவாங்கி பயன்படுத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளும் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கம். சுத்தமான அசல் மூலிகைகளா என்று கவனித்து வாங்கவும்.
மூலிகை சாம்பிராணி செய்ய தேவையான பொருட்கள்.
சுத்த சாம்பிராணி - 500 கிராம்
குங்கிலியம் -150 கிராம்
புணுகு - 10 கிராம்
கோரோஜனை -20 கிராம்
தசாங்கு பொடி - 50 கிராம்
அகில் - 50 கிராம்
சந்தன தூள் (ஒரிஜினல்) - 100 கிராம்
வெட்டி வேர் - 50 கிராம்
மட்டிப்பால் - 50 கிராம்
கருந்துளசி சமூலம் - 50 கிராம்
நொச்சி இலை - 50 கிராம்
திருநீற்று பச்சிலை - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
மருதானி விதை - 50 கிராம்
பேய்மிரட்டி இலை -50 கிராம்
விஷ்ணு கிரந்தி - 50 கிராம்
குப்பை மேனி - 50 கிராம்
நாட்டு மா இலை - 25 கிராம்
வில்வம் இலை - 50 கிராம்
70வது ஆண்டு வேம்பு இலை, பட்டை, வேர் - 50 கிராம்
தலைச்சூரி வேர் - 50 கிராம்
அருகம் புல் - 50 கிராம்
கொட்டை கரந்தை இலை - 50 கிராம்
தொட்டால் சுருங்கி வேர் - 50 கிராம்
தேவதாரு - 50 கிராம்
சிறியா நங்கை - 30கிராம்
வெண்கடுகு - 30 கிராம்
ஆலங்குச்சி - 30 கிராம்
அரசங்குச்சி - 30கிராம்
ஓமம் - 20 கிராம்
சுக்கு - 20 கிராம்
சிற்றத்தை - 30 கிராம்
மேற் கூறிய மூலிகைகளை நன்றாக பொடி செய்து ஒன்றோடு ஒன்று கலக்கும் விதமாக கலக்கி காற்று பூகாத கண்ணாடி புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு வாரம் இரு முறை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை நாட்களில் அடுப்புகரியில் தனல் மூட்டி அதனுடன் சாம்பிராணி சேர்த்து கோவில், பூஜை அறை, வீடு, கடை, வாகம், தொழில் செய்யும் இடம் ஆகிய பகுதிகளில் மூலிகை சாம்பிராணி தூபம் காட்டவும். தூபம் காட்டும் பொழுது அவ்விடம் முழுவது பரவி இருக்கும் படி காட்டினால் விரைவில் மாற்றங்கள் உணரலாம்.
மூலிகை சாம்பிராணி பயன்
சாம்பிராணியை புகையை சுவாசிப்பதானால் சுவாசம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கி போகும், தலைவலி, சளி, தும்மல் விரைவில் நல்ல பலனை கொடுக்க கூடியது. இந்து மரபுபடி, வீட்டில் தூபம் காட்டினால் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள், கடன் தீரும், பில்லி, சூனியம், பீடைகள் விலகும், தீராத நோய்கள் தீரும், மன அமைதி கிடைக்கும், தெய்வம் வீட்டில் தங்கும் மேலும் பல கருத்துகள் உள்ளன. இவை அனைத்தும் உண்மையே இதற்க்கு சான்று வேண்டும் என நினைப்பவர்கள் அகத்தியர், போகர், மச்சமுனி மற்று கோரக்கர் சித்தர்கள் எழுதிய நூல்களை பார்க்கவும் சாம்பிராணி செய்முறை விளக்கமும் பாடலாக உண்டு.
மேற்குறிப்பிட்ட மூலிகைகளில், தன வசியம், லட்சும் கடாட்சம், தெய்வ மூலிகைகள், கற்ப்ப மூலிகைகள், பேய், பிசாசு, பில்லி சூனியத்தை கட்டும் மூலிகைகள், ஹோமம் மூலிகை, நோய்தீர்கும் குணமாக்கும் மூலிகைகள், கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாக்கும் வசிய மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை சாம்பிராணி செய்து அனைவரும் பயன்படுத்தி வாழமோடு வாழ்க.
Comments
Post a Comment