Posts

Showing posts from February, 2020

மூலிகை சாம்பிராணி வீட்டில் எப்படி செய்வது

சிவசிவ 🙏💐🙏💐🙏💐🙏💐 மூலிகை சாம்பிராணி வீட்டில் எப்படி செய்வது  அசல் சாம்பிராணி மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை சாம்பிராணி செய்வது குறித்த குறிப்பினை தருகிறேன் அவற்றின் தன்மை மாறாமல் இருக்க சுத்தமான  எதுவும் கலக்காத அசல் சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கேட்டுவாங்கி பயன்படுத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளும் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கம். சுத்தமான அசல் மூலிகைகளா என்று கவனித்து வாங்கவும். மூலிகை சாம்பிராணி செய்ய தேவையான பொருட்கள். சுத்த சாம்பிராணி - 500 கிராம் குங்கிலியம் -150 கிராம் புணுகு - 10 கிராம் கோரோஜனை -20 கிராம் தசாங்கு பொடி - 50 கிராம் அகில் - 50 கிராம் சந்தன தூள் (ஒரிஜினல்) - 100 கிராம் வெட்டி வேர் - 50 கிராம் மட்டிப்பால் - 50 கிராம் கருந்துளசி சமூலம் - 50 கிராம் நொச்சி இலை - 50 கிராம் திருநீற்று பச்சிலை - 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம் மருதானி விதை - 50 கிராம் பேய்மிரட்டி இலை -50 கிராம் விஷ்ணு கிரந்தி  - 50 கிராம் குப்பை மேனி - 50 கிராம் நாட்டு மா இலை - 25 கிராம் வில்வம் இலை - 50 கிராம் 70வது ஆண்டு வேம்பு இலை, பட்டை, வேர் ...