செவ்வாய் தோசம்:-
விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீன லக்ன செவ்வாய் தோசம்.
************ ************ ********** ********** *************
விருச்சிக லக்னத்திற்கு 1ல் செவ்வாய் ஆட்சி பெறுவதால் செவ்வாய் தோசம் இல்லை,
2ல் செவ்வாய் தனுசு குரு வீடு எனவே செவ்வாய் தோசமில்லை,
4ல்செவ்வாய் கும்ப வீடானதால் தேவகேரள விதிப்படி செவ்வாய் தோசமில்லை,
7மிடம் ரிஷபத்தில் உள்ள செவ்வாய் தோசம் உண்டு,
8மிடம் மிதுன செவ்வாய் தோசமுண்டு,
12மிடம் துலாத்தில் உள்ள செவ்வாய் தோசமில்லை,
ஆக,விருச்சிக லக்னத்தவர்களுக்கு 7,8 மிடத்தில் மட்டும் செவ்வாய் தனித்திருக்க #செவ்வாய்தோசம் உண்டு,
தனுசு லக்னத்திற்கு 1,2,4,,8,12ல் செவ்வாய் இருந்தால் தோசமில்லை,
7ல் மட்டும் இருக்க செவ்வாய் தோசமுண்டு,
மகர லக்னக்காரர்களுக்கு 1,24,7,8,12 என எங்கு செவ்வாய் இருந்தாலும் தோசமில்லை,
கும்ப லக்னக்காரர்களுக்கு1,2,4,7,8,12 என எங்கு செவ்வாய் நின்றாலும் தோசமில்லை,
மீன லக்னக்காரர்களுக்கு4,7,8,மிடத்தில் மட்டும் செவ்வாய் இருந்தால் தோசமுண்டு,1,2,12ல் இருக்க தோசமில்லை,
ஆக இந்த பனிரெண்டு லக்னத்திற்கு எங்கு செவ்வாய் தோசம் என்பதை அறிந்தோம்,இந்த செவ்வாய் கூட தனியே நின்றால்தான் தோசம்.செவ்வாயோடு குரு,சனி,சூரியன், புதன்,சந்திரன்,ராகு கேது என்ற ஒரு கிரகம் இணைந்தாலோ பார்த்தாலோ அந்த தோசமும் நீங்கிவிடும்.
எனவே ஜோதிட நூல்கள் 12ராசிக்கும் ராசிக்கு 6 இடங்களில் வீதம் 12 ராசிக்கும் 72 இடங்களில் செவ்வாய் நின்றால் தோசம் என விதியை வகுத்தது,பிறகு அந்த செவ்வாய் தோசமானது எவ்வாறு பலமிழந்து நீர்த்து போகிறது என்பதை விதிவிலக்கு என்ற சூத்திரம் மூலம் விளக்கியது, விதிவிலக்கை பயன்படுத்தி செவ்வாய் தோசத்தை கணித்தால் 72 இடங்களில் 54 இடங்களில் நின்ற செவ்வாய் தோசம் தருவதில்லை என்ற முடிவிற்கு வருகிறோம்,மீதியுள்ள 18 இடங்களில் மட்டும் செவ்வாய் தனித்து நின்றால் மட்டுமே தோசம் தரும் என ஆய்வு முடிவில் வெளிப்படுகிறது,
இந்த 18 இடங்களில் கூட சனி,குரு,சூரி,புதன்,,சந்திரன்,ராகு,கேது இணைந்து விட்டாலோ,பார்த்து விட்டாலோ அந்த செவ்வாய் தோசமும் இல்லை என்றாகிவிடும்
ஆகவே இந்த விதிகளின்படி லட்சத்தில் ஒருத்தருக்கே செவ்வாய்தோசம் வர, இருக்க வாய்ப்புண்டு,
எனவே செவ்வாய் தோசம் பற்றிய வீண் ஐயம் ,வதந்தியை நம்ப வேண்டாம்,
இந்த விதி,விதிவிலக்குகளை எப்படி ஞாபகம் வைத்து செவ்வாயை கணக்கிடுவது என மலைக்க வேண்டாம்,கீழ்கண்ட சார்ட்டை அப்படிய எளிதாக பார்த்து ஒரே நொடியில் ஒருவருக்கு செவ்வாய் தோசம் உள்ளதா இல்லையா என நீங்களே சொல்லிவிடலாம்,
Comments
Post a Comment