ஜோதிடத்தில் கர்ணம் :
பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும்.கரணங்கள் மொத்தம் 11.
ஸ்திர நிலையான 4 கரணங்கள் அதாவது தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரண்டாவது கரணம் அமாவாசை திதியில் இரண்டு கரணம் வளர்பிறை பிரதமையில் முதல் கரணம் மட்டுமே அதாவது சகுனி,சதுஸ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகியவைகள் ஸ்திர கணங்களாகும்.
மற்ற பவம்,பாலவம்,கெளலவம்,தைதுலம்,கரஜை,வணிஜை,பத்திரை(விஷ்டி) ஆகிய7 கரணங்கள் சர சுழற்சி முறையில் மற்ற திதிகளில் இயங்கக்கூடியவைகள்.
இதில் பவம்,பாலவம்,கெளலவம்,தைதுலம்,கரஜை ஆகிய 5 கரணங்கள் முழுக்க சுபதன்மைக் கொண்டவைகளாகும்.வணிஜை,சதுஷ்பாதம் ஆகிய இரண்டு கரணங்கள் மத்திமமான சுபதன்மக் கொண்டவை. பத்திரை(விஷ்டி),சகுனி,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய 4 கரணங்கள் அசுப தன்மை கொண்டவைகள்.ஒவ்வொரு வருடமும் தை மாத பிறப்பன்று மகர சங்ராந்தி தேவதை இந்த கரணங்களின் அடிப்படையில் தான் உருவம் கொண்டு பலன் உரைக்கப்படுகின்றன சங்கராந்தி தேவதை பலன்களை இன்னொரு பதிவில் விரிவாகப் பார்த்துக்கொள்ளலாம். இந்தப்பதிவில் சாஸ்திரம் படிக்கவிட்டாலும் சாஸ்த்திரத்தின் படி காரியம் செய் என்று முன்னோர்கள் நமக்கு சொல்லிச்சென்று உள்ளார்கள் அதன்படி
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களும் நாம் நன்மையானப் பலன்களை அனுபவிக்க வேண்டுமானால் அதாவது செய்கின்ற காரியங்கள் வெற்றி பேரவேண்டுமானல் இந்த 11 கரணங்களில் சுபம்,அசுபம் பார்த்து காரியங்கள் செய்தொமனால் நிச்சயமாக காரியங்கள் கைக்கூடும் இந்த கரணங்களின் குணத் தன்மைகளைப் "லட்சணங்கள்" பற்றி பார்க்கலாம்.
#பவம்கரணம் :
மிருகம் - சிங்கம்.
தேவதை-தேவேந்திரன்.
மலர்-புன்னைமலர்.
ஆகாரம்-அன்னம்.
பூசுவது-கஸ்துரி.
ஆபரணம்-மாணிக்கம்.
தூபம்-அகில்.
வஸ்திரம்-வெண்மையானது.
பாத்திரம்-பொற்கலம்.
#பாலவகரணம்:
மிருகம்- புலி.
தேவதை-பிரம்மதேவன்.
மலர்-சிறுசெண்பகமலர்.
ஆகாரம்-பாயசம்.
பூசுவது-சந்தனம்.
ஆபரணம்-முத்து.
தூபம்-சந்தனப்பொடி.
வஸ்திரம்-சிவப்பு.
பாத்திரம்-வெள்ளி.
#கெளலவகரணம் :
மிருகம்-பன்றி.
தேவதை-மித்திரன்.
மலர்-மகிழம்பூ.
ஆகாரம்-பணியாரம்.
பூசுவது-குங்குமம்.
ஆபரணம்-வெள்ளி.
தூபம்-வில்லப்பொடி.
வஸ்திரம்-கண்டாங்கி.
பாத்திரம்-செப்பு.
#தைதுலகரணம் :
மிருகம்- கழுதை.
தேவதை-பித்ருக்கள்.
மலர்-மல்லிகைப்பூ.
ஆகாரம்-அப்பம்.
பூசுவது-கோரோசனம்.
ஆபரணம்-வச்சிரம்"வைரம்".
தூபம்-குங்கம்.
வஸ்திரம்-மஞ்சள்.
பாத்திரம்-இரும்பு.
#கரஜைகரணம் :
மிருகம்- யானை.
தேவதை-பூமிதேவி.
மலர்-செம்பருத்தி.
ஆகாரம்-பால்.
பூசுவது-காசுகட்டி.
ஆபரணம்-மாணிக்கம்.
தூபம்-நீலவுண்டை.
வஸ்திரம்-கருப்பு.
பாத்திரம்-ஈயம்.
#வணிஜைகரணம் :
மிருகம் - காளை.
தேவதை-ஸ்ரீதேவி.
மலர்-நீலலோசனம்.
ஆகாரம்-தயிர்.
பூசுவது-மஞ்சள்.
ஆபரணம்-வித்துருவம்.
தூபம்-சங்குப்பொடி.
வஸ்திரம்-கம்பளி.
பாத்திரம்-பஞ்சலோகம்.
#பத்திரைகரணம் :
மிருகம்-கோழி.
தேவதை-இயமன்.
மலர்-குன்றிமணிப்பூ.
ஆகாரம்-சித்திரான்னம்.
பூசுவது-கர்ப்பூரம்.
ஆபரணம்-புஷ்பராகம்.
தூபம்-நன்நீர்"நல்லதண்ணீர்".
வஸ்திரம்-தோல்.
பாத்திரம்-வெண்கலம்.
#சகுனிகரணம் :
மிருகம்-காக்கை.
தேவதை-ஸ்ரீவிஷ்ணு.
மலர்-செண்பகம்.
ஆகாரம்-வெல்லம்.
பூசுவது-சேறு.
ஆபரணம்-கருத்தநூல்.
தூபம்-அகில்.
வஸ்திரம்-கந்தை.
பாத்திரம்-கற்பாத்திரம்.
#சதுஸ்பாதகரணம் :
மிருகம்-நாய்.
தேவதை-மணிபத்திரன்.
மலர்-கொன்றைமலர்.
ஆகாரம்-தேன்.
பூசுவது-விபூதி.
ஆபரணம்-படிகமணி.
தூபம்-சந்தனப்பொடி.
வஸ்திரம்-தழை.
பாத்திரம்-மரப்பாத்திரம்.
#நாகவகரணம் :
மிருகம்-பாம்பு.
தேவதை-ஆதிசேஷன்.
மலர்-ஓலைப்பூ.
ஆகாரம்-நெய்.
பூசுவது-கதம்பம்.
ஆபரணம்-வைடூரியம்.
தூபம்-சாம்பிராணி.
வஸ்திரம்-மரத்தோல்.
பாத்திரம்-கப்பறை.
#கிம்ஸ்துக்கினகரணம் :
மிருகம்-புழு.
தேவதை-வாயுதேவன்.
மலர்-கொங்குமலர்.
ஆகாரம்-சர்க்கரை.
பூசுவது-ஜவ்வாது.
ஆபரணம்-முத்து.
தூபம்-குங்கிலியம்.
வஸ்திரம்-அரைச்சட்டை.
பாத்திரம்-மூங்கில்.
சுபகாரியங்கள் அல்லது மனத்தில் நினைத்தக் கரியத்திற்க்காக பயணம் மேற்கொள்ளும்போதும் மனதில் எண்ணியது நன்மையாக நடந்தேற மேலேக் குறிப்பிட்ட சுப கரணங்களில் அதற்குண்டான குண தன்மையுள்ள வற்றை சிறிதேனும் உபயோகித்து அதாவது மலர்,பூசுவது,ஆகாரம்,தூபம் ஆகியவற்றில் உங்களால் முடிந்தது அந்த நேரத்தில் உள்ள கரணத்திற்கு ஏற்றவாறு சொல்லியுள்ள தன்மையைப் பயன்படுத்தி பாருங்கள்.
Comments
Post a Comment