ஜோதிடத்தில் கர்ணம் :
பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும்.கரணங்கள் மொத்தம் 11. ஸ்திர நிலையான 4 கரணங்கள் அதாவது தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரண்டாவது கரணம் அமாவாசை திதியில் இரண்டு கரணம் வளர்பிறை பிரதமையில் முதல் கரணம் மட்டுமே அதாவது சகுனி,சதுஸ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகியவைகள் ஸ்திர கணங்களாகும். மற்ற பவம்,பாலவம்,கெளலவம்,தைதுலம்,கரஜை,வணிஜை,பத்திரை(விஷ்டி) ஆகிய7 கரணங்கள் சர சுழற்சி முறையில் மற்ற திதிகளில் இயங்கக்கூடியவைகள். இதில் பவம்,பாலவம்,கெளலவம்,தைதுலம்,கரஜை ஆகிய 5 கரணங்கள் முழுக்க சுபதன்மைக் கொண்டவைகளாகும்.வணிஜை,சதுஷ்பாதம் ஆகிய இரண்டு கரணங்கள் மத்திமமான சுபதன்மக் கொண்டவை. பத்திரை(விஷ்டி),சகுனி,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய 4 கரணங்கள் அசுப தன்மை கொண்டவைகள்.ஒவ்வொரு வருடமும் தை மாத பிறப்பன்று மகர சங்ராந்தி தேவதை இந்த கரணங்களின் அடிப்படையில் தான் உருவம் கொண்டு பலன் உரைக்கப்படுகின்றன சங்கராந்தி தேவதை பலன்களை இன்னொரு பதிவில் விரிவாகப் பார்த்துக்கொள்ளலாம். இந்தப்பதிவில் சாஸ்திரம்...