இருமலை போக்கும் பஞ்ச தீபாக்கினி சூரணம் !

இருமலை போக்கும் பஞ்ச தீபாக்கினி சூரணம் !

வறட்டு இருமல், தொடர் இருமல், கக்குவான் இருமல், சளி இருமல் போன்ற அனைத்து வகை இருமல் நோய்களும் நீங்க இந்த சூரணத்தை சாப்பிடலாம்.

1. சுக்கு - இரண்டு துண்டுகள்
2. மிளகு - ஒரு தேக்கரண்டி
3. திப்பிலி - ஒரு தேக்கரண்டி
4. ஏலக்காய் - ஒரு தேக்கரண்டி
5. சீரகம் - ஒரு தேக்கரண்டி
6. நாட்டுப் பசு நெய் - தேவைக்கு

அனைத்துப் பொருட்களையும் தனித்தனியே நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து மொத்தமாக சேர்த்து நன்கு அரைத்து சூரணமாக செய்து கொள்ளவும் இந்த சூரணத்திற்குப் பெயர் பஞ்ச தீபாக்கினி சூரணம் ஆகும்.

சாப்பிட வேண்டிய முறை :

பெரியவர்கள் இந்த பஞ்ச தீபாக்கிணி சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து நாட்டுப் பசு நெய்யில் சேர்த்துக் குழைத்து காலை மாலை தினம் இருவேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூன்று நாட்களில் பரிபூரண குணம் அடைவார்கள்.

சிறுவர்களுக்கு அரை தேக்கரண்டி பஞ்ச தீபாக்கினி சூரணத்தைத் தேனில் குழப்பி உணவுக்கு முன் காலை மட்டும் இரண்டு நாட்கள் கொடுத்து வர பரிபூரண குணமாகும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து நாக்கில் தடவ நோய் சரியாகும் அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கத்தில் இந்த சூரணம் பன்னிரெண்டு நோய்களைத் தீர்க்கும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-