கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
🌺 கனவு என்பது ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது நாம் அறியாத வேளையில் வருவது ஆகும். குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம் காணும் கனவில் வரும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கேற்ப பலன்களும் மாறும். என்ன வகையான விலங்குகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பது பற்றிப் பார்ப்போம்.
🐇 கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று, நம் உறவினர்களைச் சந்திப்போம் அல்லது அவர்கள் நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள். ஆடுகள் நம் கனவுகளில் வந்தால், புதியதாக கார், அல்லது பைக் வாங்கப்போகிறோம் என்று அர்த்தம். பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்சனைகள் நம்மை விட்டு நீங்கும்.
🐘 கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி இடையே உறவு ஏற்படும். இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும். யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.
🐅 புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல கனவு வந்தால், நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம். பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சு ழும். பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம். காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால், வீண் பிரச்சனைகள் வந்துபோகும்.
🐍 ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும். நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும். வெண்ணிறப் பாம்பு கடித்தல், தேள் கடித்தல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு. மயில் அகவுவது போல கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும்.
🐁 எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும். குரங்குகள் கனவில் வந்தால், வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடன் பிரச்சனை அதிகரிக்கும். கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும். வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும். குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையு ட்டுவது போலவும், தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.
🐎 குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
🐦 வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும்.
Comments
Post a Comment