ஹோரைகள்
ஹோரைகள்
ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்லா விட்டாலும் அவை நல்ல விதமாக கூடி வரும்.
ஹோரையை அறிந்து நற்காரியங்களை செய்து வாழ்வில் முன்னேறலாம்...
சூரிய ஹோரை செய்யக்கூடியவை:
இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் . தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம் உயில், சாசனங்களில் கையெழுத்திடலாம். பத்திரங்கள் பார்க்கலாம் சிவதரிசனம் செய்யலாம்.
செய்யகூடாதவை :
சொந்த வீட்டிலோ, வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது . புது வீட்டில் குடி ஏறக்கூடாது. ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது.
சந்திர ஹோரை செய்யக்கூடியவை :
புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால், அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம். அம்மன் சந்நிதிக்கு சென்று வழிபடலாம். கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம். கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம்.
செய்ய கூடாதவை:
தேய்பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சமந்தமாக பேசகூடாது.
செவ்வாய் ஹோரை செய்யக்கூடியவை : சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். சகோதரர்கள், பங்காளிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் .
செய்ய கூடாதவை:
கடன் வசூல் செய்ய போகக்கூடாது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .
புதன் ஹோரை செய்யக்கூடியவை :
கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களையும் செய்யலாம். ஜாதகம் பார்க்கலாம். கணக்கு வழக்குகள் பார்க்கலாம். வங்கியில் புது கணக்கு தொடங்கலாம். மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம். வக்கீல்களை பார்க்கலாம் . கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம். நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம். பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.
செய்ய கூடாதவை: பெண்பார்க்கும் சம்பவம் கூடாது. வீடு, நிலம் பற்றி பேச கூடாது. சொத்துகளை பார்வையிடக்கூடாது.
குரு ஹோரை செய்யக்கூடியவை :
சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை. பொன் நகைகள் வாங்கலாம். புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் . வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். தெட்சிணா மூர்த்தியை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம். கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம். யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம்.
செய்ய கூடாதவை:
முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது. புது மன தம்பதிகளுக்கு விருந்து, உபசாரம் செய்யகூடாது.
சுக்கிர ஹோரை செய்யக்கூடியவை :
பெண் பார்க்கும் சம்பர்தாயத்திற்கு மிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிபடுத்தலாம். வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து வைக்கலாம் வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம். சொத்து விஷயங்களை பேசலாம். கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம். பெண்களின் உதவியை நாடலாம். பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம். அம்பாள் ஆண்டாள் தளங்களுக்கு சென்று வழிபடலாம்.
செய்ய கூடாதவை:
நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது. துக்கம் விசாரிக்ககூடாது.
சனி ஹோரை செய்யக்கூடியவை : சொத்து சமந்தமாக பேசலாம். இரும்பு சாமான்கள், பீரோ, வண்டி, ஆகியவை வாங்கலாம். மரக்கன்றுகள் நடலாம். நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம். வாங்கிய கடனை அடைக்கலாம்.
பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லலாம்.
செய்ய கூடாதவை:
நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது. மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கூடாது. முதல் முதலாக பிறந்த குழந்தையை போய்ப்பார்க்க கூடாது . துக்கம் விசாரிக்க கூடாது.
தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களை செய்வதால் அவை நல்ல பலன் தரும்.
Comments
Post a Comment