அள்ள அள்ள பணம் வேண்டுமா
அள்ள அள்ள பணம் வேண்டுமா
பணம் இல்லாதவரை இந்த சமூகம் ஒதுக்கியே வைத்திருக்கின்றது. பணம் இல்லாதவர்கள் வாழ்வில் மனரீதியாக பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
மனைவி கேட்கும் போது வாங்கி தர இயலாத கணவன் மனரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகின்றான், மனைவியும் கணவனிடமிருந்து ஏமாற்றத்தை பதிலாக பெறும் போது மனரீதியாக வலிமையிழக்கின்றார்.
கடன்காரன் போன் செய்யும் போதோ வீட்டின் வாசலில் வந்து தரக்குறைவாக பேசும் போது மனிதன் இந்த சமூகத்தின் முன்னே கூனி குறுகி நிற்கின்றான்.
பணத்தின் அறுமையை பின்வரும் பழமொழிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
"பணம் பத்தும் செய்யும்"
"பணம் இல்லாதவன் பிணம்"
"பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்"
பணத்தை பற்றி திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில்
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என மிகதெளிவாக குறிப்பிடுகின்றார்.
தன்னுடைய குழந்தைக்கு தீபாவளிக்கு அல்லது பிறந்தநாளுக்கு ஒரு புத்தாடை கூட வாங்கி தரமுடியாமல் பல தந்தைமார்கள் படும்பாடு சொல்லி மாளாது.
இந்த பணத்தை வசீகரிக்க என்ன வழி பலர் என்னிடம் கேட்டுள்ளனர்.
அப்படி யோசிப்பவர்களுக்கு இந்தகட்டுரை சமர்ப்பணம்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்
முதலில் திருக்கணித பஞ்சாங்கத்தை வாங்கி கொள்ளுங்கள்
வெள்ளிக்கிழமை கீழ்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாளை குறித்துகொள்ளுங்கள்
பரணி,பூரம்,பூராடம், பூசம், அனுசம்,உத்திரட்டாதி
சனிக்கிழமை கீழ்கண்ட நட்சத்திரங்கள் வரும் நாளை குறித்துக்கொள்ளுங்கள்
பரணி,பூரம்,பூராடம், பூசம், அனுசம்,உத்திரட்டாதி
மேற்கண்ட நாளில் அருகில் இருக்கும் அஷ்டலட்சுமி கோவில் அல்லது லக்ஷ்மிநரசிம்மர் கோவில் அல்லது அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சுக்கிர ஹோரையில் செல்ல வேண்டும்.
தொடர்ந்து அக்கோவிலுக்கு மேலே குறிப்பிட்ட நாட்களில் சென்று உங்கள் பெயர்,நட்சத்திரம்,குலம்,கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்துகொள்ளுங்கள்.
இறைவனை மனமார வழிபடுங்கள்.
திருமணமானவர்கள் தம்பதி சமேதராக செல்ல வேண்டும். மனைவியில்லாமல் சென்றால் பலனில்லை.
இவ்வாறு 48 முறை கோவிலுக்கு சென்று வர உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் வருவதை கண்கூடாக உணரலாம்.
Comments
Post a Comment