Posts

Showing posts from August, 2025

நுரையீரல் பலம் பெற:-

 நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம் ஒரு கைப்பிடி விழுதி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று இதில் பாதியளவை விழுங்கி விட்டு    மீதமுள்ள பாதியளவு விழுதி இலையின் விழுதை வாயின் தாடைப் பகுதியான கடை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி பாருங்கள்   எப்போது ஓடினாலும் ஏற்படும் களைப்பும் இளைப்பும் இப்பொழுது நமது உடலில் ஏற்படாது இது உறுதி   ஆச்சரியமாக இருக்கலாம்  ஆனால் இதுதான் உண்மை   இதற்குக் காரணம் யாதெனில்   பச்சையாக இருக்கின்ற விழுதி இலையை நன்றாக உமிழ்நீருடன் கலக்கும்படி மென்று அதன்பின் விழுங்கி வந்தால்    இதன் மூலமாக உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு   அதாவது வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே நடைபெறுகின்றது   இந்த மாற்றத்...

ஞாபக சக்திக்கு சூர்ணம்:-

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம். *செய்முறை* : 1 - வல்லாரை இலை - 70 -கிராம் 2 - துளசி இலை - 70 -கிராம் 3 - சுக்கு - 35 -கிராம் 4 - வசம்பு - 35 -கிராம் 5 - கரி மஞ்சள் -35 -கிராம் 6 - அதிமதுரம் -35 -கிராம் 7 - கோஷ்டம் - 35 -கிராம் 8 - ஓமம் - 35 -கிராம் 9 - திப்பிலி - 35 -கிராம் 10 - மர மஞ்சள் - 35 -கிராம் 11 - சீரகம் - 35 -கிராம் 12 - இந்துப்பு - 35 -கிராம் இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும். *உண்ணும் முறை* : காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும். ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக...

சிரசாசனம்:-

Image
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூச்சுத்திணறல் குறையும்*. *நுரையீரல்களில் உள்ள சளி விரைவில் வெளியேறும் சுவாசக் கோளாறுக்கு பயனுள்ளது*. *பெயர் விளக்கம்* : அர்த்த என்றால் பாதி என்று பொருள். சீர்ஷா என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது. *செய்முறை*: வஜ்ராசனத்தில் உட்காரவும், கைவிரல்களை கோர்த்து குனிந்து முழங்கையிலிருந்து கைவிரல்கள் வரை தரை விரிப்பின் மேல் படிய வைக்க வேண்டும். தலையின் மேல் பகுதியை தரையில் வைக்கவும். உள்ளங்கைகள் தலையின் பின்புறத்தை தாங்கிக் கொள்ளும்படி இருக்கட்டும். முழங்கைகளை தரையிலிருந்து உயர்த்தி கால் விரல்களை முகத்தை நோக்கி சற்று நகர்த்தி வைக்கவும். முழங்கால்கள் மடங்காமல் இருக்கட்டும்.   இந்த ஆசன நிலையில் 1 முதல் 2 நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு கால்களை மடக்கி முழங்கால்களை தரைவிரிப்பின் மேலே வைத்து உடனே தலையை மேலே தூக்காமல் சில வினாடிகள் இருந்து பிறகு வஜ்ராசன நிலைக்கு வரவும். அதிலிருந்து கால்களை நீட்டி வைத்து ஓய்வு நிலைக்கு செல்லவும். (சுவாசனம்). இந்த...