Posts

Showing posts from April, 2022

அமாவாசை பரிகாரம் :-

*அமாவாசை தினத்தில் பெண்கள் 1 சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும். முன்னோர்களுக்கு இருக்கும் எப்பேர்பட்ட கோபமும் தணிந்து, அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்று விடலாமே!*  *நம்முடைய வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு முன்னோர்களுடைய கோபமும் ஒரு காரணம் தான். முன்னோர்களுடைய கோபம் என்றால், அவர்கள் மனம் வருந்தி என்றைக்குமே நம்மை திட்டி சாபம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம்மை மறந்து விட்டார்களே என்று அவர்களுடைய மனதில் சிறியதாக ஒரு ஏக்கம் இருந்தால் கூட, அந்த ஏக்கம் நமக்கு சாபமாக மாறி விடும். அது நம்மை மட்டுமல்லாமல் நமக்கு அடுத்து வரக்கூடிய, அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் அளவிற்கு இந்த சாபம் பொல்லாதது என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று.*   *முன்னோர்களுக்கு நாம் செய்யும் கடமையை தவறாமல் செய்து வர வேண்டும். இதற்காகத்தான் அமாவாசை வழிபாடு, அவர்கள் இறந்த திதி அன்று தர்ப்பணம் கொடுக்கும் வழிபாடு என்று முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் நம்முடைய சாஸ்திரத்தில் தான் எப்போதுமே ஆண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடு, பெண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடு இருக்கின்றதே! ஆணும் பெண்ணும் சமம் என்று எவ்...