மோட்ச தீபம் ஏற்றும் முறை:-
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: கேள்வி: மோட்ச தீபம் ஏற்றும் வழி: தேவையானவை: 1. வாழை இலை 2. பச்சை கற்பூரம் 3. சீரகம் 4. பருத்தி கொட்டை 5. கல் உப்பு 6. மிளகு 7. நவ தானியம் 8. கோதுமை 9. நெல் (அவிக்காதது) 10. முழு துவரை 11. முழு பச்சை பயறு 12. கொண்டை கடலை 13. மஞ்சள் (ஹைபிரிட் இல்லாதது) 14. முழு வெள்ளை மொச்சை 15. கருப்பு எள் 16. முழு கொள்ளு 17. முழு கருப்பு உளுந்து 18. விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42 விளக்குகள் 19. தூய பருத்தி துணி (கை குட்டை அளவு) - 21 20. சுத்தமான நெய் விளக்கு ஏற்றும் முறை: எல்லா பொருள்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நினைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை ஆறு மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந...