Posts

Showing posts from March, 2019

பயன்உள்ளதகவல்

Image
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல் # 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும். 8. வேனல் கட்டி தொல்லையா? ...

ஆரோக்கியம்

Image
நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுட...

அஷ்டபந்தனம்

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்? அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை. கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி. `அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’ ''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். உலக உயிர்களெல்லாம் நலமாக ...